தெனாலிராமன் கதைகள் - வைத்திய செலவு
வைத்திய செலவு:
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல்நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும்வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறையஆகும் என்று சொல்லி விட்டுப்போய் விட்டார்.
வைத்தியசெலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால்அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்குசேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார்.
தெனாலிராமனும்உயர் ஜாதி அரேபியக் குதிரைவைத்திருந்தான். நல்ல விலை போகும்அதனால் உடல் நலம் தேறியதும்குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடுபணம் கொடுத்தான்.
பணத்தைப்பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம்சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத்தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனைசந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப்பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையைவிற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும்தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாயவட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம்கற்பிக்க விரும்பினான்.
"சரிகுதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன்நீயும் வா" என்று அவனையும் அழைத்துக்கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப்புறப்பட்டனர்.
போகும்போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும்அழைத்துச் சென்றான்.
சந்தையில்தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமேகூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன்தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்னவிலை" என்று கேட்டான்.
அதற்குதெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்தபூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்தபூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.
தெனாலிராமனின்பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்றமிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும்பூனையையும் வாங்கிச் சென்றான்.
பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும்கொடுத்தான். ஆனால் ஒரு பவுனைசேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்றுநினைத்து தானே உனக்குப் பணம்கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.
அதற்குதெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையைவிற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியேகுதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும்உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீவாங்க மாட்டேன் என்கிறாயே... இது என்ன நியாயம்" என்றான்.
சேட்டோ500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர்கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.
மன்னர்இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்றுதீர்ப்புக் கூறினார்.
தெனாலிராமன் கதைகள் - வைத்திய செலவு
Reviewed by haru
on
August 10, 2012
Rating:
Reviewed by haru
on
August 10, 2012
Rating:



No comments