Ads Below The Title

தெனாலிராமன் கதைகள் - வித்தைக்காரனை வென்ற கதை

வித்தைக்காரனை வென்ற கதை:

தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டுஅவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில்தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவதுஎன்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாகஇருந்தான்.

ஒருநாள்வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்துகாட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப்பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப்புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான் 

அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில்வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்துகாட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்துகாட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம்பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப்பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விடவித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான்செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமாஎன்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்குஎன்று முடிவு செய்யுங்கள் " என்றவாறுமுன்னால் வந்து நின்றான்.

அரசருக்குமிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்துவிட்டாலே அது மிகவும் சுவையுடையதாகவே இருக்குமல்லவா?  

எனவே, உன் வித்தைகளையும்காட்டு ' என்று அனுமதி வழங்கினார்மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரேகோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள்தெரியும்செய்து காட்டு

நீசெய்யும் அத்தனை வித்தைகளையும் நான்செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால்வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும்செய்யவில்லை.  

ஒரே ஒரு வித்தைமட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டுசெய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்துகொண்டு அதே வித்தையைச் செய்துகாட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம்பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்துவிட வேண்டும்."என்றான்.

வித்தைக்காரனோவெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணைமூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டேசெய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரைவணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான்.

தன்கை நிறைய மணலை வாரிஎடுத்துக் கொண்டு மூடிய தன்கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம்செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன்கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப்பார்த்து "இந்த வித்தையை நீர்உம கண்களைத் திறந்து கொண்டே செய்துகாட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான்தோற்றுப் போனேன். என்னை மன்னித்துவிடுங்க" ளென்று தலை குனிந்துநின்றான்.  

மன்னர் மகிழ்ந்து இராமனைஅழைத்து அவனைப் பற்றி அறிந்துகொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன்புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறுபொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.

இராமன்"அரசே! இந்த வித்தைக்காரன் வித்தைகாட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லைஎன்று பேசிக் கொண்டிருந்தான். அவன்கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.  

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுஎன்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும்நான் இவ்வாறு செய்தேன். நான்வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்குஎன்னை மன்னியுங்கள்.  

ஆயிரம் பொன்னையும் அவருக்கேஅளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன்சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாகஅளித்தார்..  பின்னர்தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தானவிகடகவியாக அமர்த்திக் கொண்டார்.
தெனாலிராமன் கதைகள் - வித்தைக்காரனை வென்ற கதை தெனாலிராமன் கதைகள் - வித்தைக்காரனை வென்ற கதை Reviewed by haru on August 10, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]