தெனாலிராமன் கதைகள் - புலவரை வென்ற தெனாலிராமன்
புலவரை வென்ற தெனாலிராமன்:
ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர்என்ற ஒருவர் வந்திருந்தார். அவர்சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மைபோல யாரும் புலமை பெற்றவர்இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்றுஅங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும்வந்தார்.
அவர் இராயரின் அவைக்கு வந்து தன்திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டுஅஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராததுகண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள்இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.
அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து"பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான்தயார். இன்று போய் நாளைவாருங்கள்" என்றான்.
இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாகஇருந்தது. அவர்கள் இராமனை வெகுவாகபாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால்வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும்இருந்தது.
மறுநாள்இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்றவிலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால்சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

இராமன்அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷபந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான்உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.
வித்யாசாகருக்குகுழப்பம் மேலிட்டது. அவர் இது வரைஎத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல்ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்தநூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்குதம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
அன்றிரவுவித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ளமுடியாத நூலாக இருந்தது. இதுவரைதோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்விஅடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவேசொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.
மறுநாள்அனைவரும் வந்து கூடினர். ஆனால்வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவேஊரை விட்டு ஓடி விட்டார்என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரைவென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.
மன்னர்இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும்திலகாஷ்ட மகிஷ பந்த என்றநூலை பற்றி நானும் இதுவரைகேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.
இராமன்மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.
இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷபந்தனம் என்றால் எருமை கட்டும்கயிறு. இதன உட்பொருளை வைத்துதான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்துகொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டிபரிசளித்தார்.
தெனாலிராமன் கதைகள் - புலவரை வென்ற தெனாலிராமன்
Reviewed by haru
on
August 10, 2012
Rating:

No comments