தெனாலிராமன் கதைகள் - அரசியின் கொட்டாவி
அரசியின் கொட்டாவி:
திருமலாம்பாள்என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள்ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவிவிட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவுஅரசர் ஆசையோடு நெருங்கிச் சென்றபோதும் அவள் கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப்பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர்தவிர்த்து வந்தார்.
அம்மயாருக்குஇது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்ததெனாலிராமன் என்ன நடந்தது என்றுவிசாரித்தார்.
அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர்எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றேதெரியவில்லை" என்று வருந்தினாள்.தெனாலிராமன்இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.
ஒரு நாள் அரசு அதிகாரிகள்சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில்பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பதுபற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
தெனாலிராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளரவேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான்.
மன்னரும்மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்கொட்டாவி விடவே கூடாது. அப்போதுதான் பயிர் நன்றாக வளரும்" என்றான்.
மன்னருக்குகோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்னவினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார்.
"வேறென்னமன்னா, உங்கள் முன்னால் கொட்டாவிவிடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார்தெனாலி ராமன்.
மன்னருக்குதெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்றுபுரிந்து போனது. அப்போதே கேவலம்கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக்கொண்டேனே என்று வருந்தினார். தெனாலிராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதைபுரியவைத்தான் என்பதையும் எண்ணி மகிழ்ந்தார்.
பின்னர்மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும்சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.
தெனாலிராமன் கதைகள் - அரசியின் கொட்டாவி
Reviewed by haru
on
August 10, 2012
Rating:
Reviewed by haru
on
August 10, 2012
Rating:


No comments