சிறுவர் நீதிக்கதைகள் – வன்முறைக்குத் தண்டனை மரணம்!
வன்முறைக்குத் தண்டனை மரணம்!
ஒரு பெரிய மரத்தின் உச்சியில், தேன் கூடு ஒன்று அமைந்திருந்தது. தேனீக்களின் தலைவியாகிய ராணி தேனீக்கு, கடவுளைச்சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அது கடவுளை நினைத்து தவம்செய்தது.
“ராணித்தேனீயே... உனக்கு என்ன வரம்வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.
கடவுளேதன் முன் பிரசன்னமாகியிருக்கும் போது, உயர்ந்தநோக்கத்துடன் கூடிய ஒரு வரத்தைக்கேட்கும் நல்ல புத்தி ராணித்தேனீக்கு ஏற்படவில்லை.
“இறைவனே! என்னிடமிருக்கும் தேனை நாடி வருபவர்களைக்கொட்டி, அவர்கள் சகிக்க முடியாதவேதனையை அனுபவிக்குமாறு செய்தருள வேண்டும்,'' என்று ராணித் தேனீகேட்டுக் கொண்டது. அதைக் கேட்டு கடவுள்மிகவும் வருத்தம் கொண்டார்.
“ராணித்தேனீயே! பிறருக்கு உதவி செய்யக்கூடிய நல்லவாய்ப்பை, வசதியை நீ கேட்டிருந்தால்நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நீயோ பிறருக்குத்தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவேவரம் கேட்கிறாய்! நீ கேட்ட வரத்தைகொடுக்காமலிருக்க முடியாது. வரம் கொடுக்கும் அதேசமயம், உனக்கு ஒரு பாடமும்போதிக்க விரும்புகிறேன்.
“என்னுடையவரத்தின் மூலம் உனக்கு கொடுக்குஒன்று ஏற்படும். அந்தக் கொடுக்கால் மற்றவர்களைக்கொட்டி வேதனைக்குள்ளாக்கும்போது, உனது கொடுக்கின் நுனி, உன்னால் கொட்டப்படுபவர்களின் உடலில் தொற்றிக் கொள்ளும். உடனே நீ உயிரிழந்து விடுவாய்.'' இவ்வாறு கூறிவிட்டு மறைந்தார் கடவுள்.
அன்று முதல் அந்த தேனீயாரையும் அந்தக் கொடுக்கால் கொதவில்லை. தேனீ தான் செய்த தவறை எண்ணி வருந்தியது. காரணம் அந்த தேனீ யாரையாவதுகொத்தினால் அது இறந்துவிடும்.
நீதி : வன்முறையில்விருப்பம் கொண்டவர்கள், தாங்கள் கையாளும் வன்முறையாலேயேஅழிந்து விடுவர். மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்என்று நினைத்துச் செயல்படுபவர்களுக்கு நன்மையே வந்து சேரும்.
Source : தினமலர்
Source : தினமலர்
சிறுவர் நீதிக்கதைகள் – வன்முறைக்குத் தண்டனை மரணம்!
Reviewed by haru
on
August 24, 2012
Rating:
No comments