Ads Below The Title

சிறுவர் கதைகள் - பணமூட்டை

பணமூட்டை:-
முன்னொருகாலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்குஇரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன்அமுதன் மிகவும் நல்லவன்; இரக்ககுணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும்கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும்வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒருமுறை ஒரு கிராமத்திற்குப் போய்தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக்கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்குவந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம்பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான்அண்ணன். இதற்குள் தம்பி அதே போலஒரு பண மூட்டையில் கற்களைவைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக்கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன்அண்ணனை எழுப்பி அவரோடு படகில்ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகுநடு ஆற்றில் போகும் போதுதம்பி ஒரு மூட்டையை எடுத்துஆற்றில் நழுவ விட்டு, "ஐயோஅண்ணா பண மூட்டை ஆற்றில்விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.

"போனால்போகட்டும். அது நம் பணமாகஇருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக்கூறினான் அமுதன். தம்பியும் தான்தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பணமூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டியமூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம்இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில்போட்டதும் ஒரு மீனை உடனேவிழுங்கச் சொல்லி கட்டளை இட்டதுஅது. மீனும் அப்பூதம் சொன்னபடிநடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியைபுரிந்து கொண்டது. எனவே, அந்தப் பணமூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையைவிழுங்கிய மீன் எங்கும் போகாதபடிகாவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டைஅடைந்தனர். தம்பி வீட்டில் தனியாகஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையைஅவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக்கண்டு, "ஐயோ! நான் அண்ணனைஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில்வலை போட்ட போது பூதம்மீனவராக மாறி அந்த மீனைஎடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச்சென்றது. அண்ணன் அவன் கேட்டபடிஒரு பவுனைக் கொடுத்து அந்தமீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன்மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாகநறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டைவெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனைநம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்குநிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள்படகில் சென்றபோது உன் கையில் இருந்துநழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

"அதுஎனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையைஉன் தம்பி வேண்டுமென்றே தூக்கிவீசிய போது அதை விழுங்கும்படிஇந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்தமீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்குஎல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்றுசொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநூறுபவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில்விழுந்து மன்னிப்புக் கோரினான்.
சிறுவர் கதைகள் - பணமூட்டை சிறுவர் கதைகள் - பணமூட்டை Reviewed by haru on August 27, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]