Ads Below The Title

சிறுவர் கதைகள் – எத்தனுக்கு எத்தன்!


எத்தனுக்கு எத்தன்!

பொன்னியூர்என்ற ஊரில் ஜனா, சுருதிஎன்ற இரு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் சிறு பிராயத்திலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். ஜனா திறமையாகச் சம்பாதித்துக்கொண்டு வருவான். சுருதி அதை வாங்கிநிம்மதியாகச் சாப்பிடுவான்.

உள்ளூரில்பஞ்சம் ஏற்பட்டது. கட்டுபடியாகவில்லை. ஆதலால் வெளியூர் சென்றுவியாபாரம் செய்து பிழைக்க இருவரும்முடிவு செய்தனர்.

இருவரும்குதிரையில் ஏறிக் கொண்டு பலஊர்களையும் கடந்து ஏமலூர்என்ற ஊரை அடைந்தனர். ஊர்எல்லையில் உள்ள சத்திரம் ஒன்றில்தங்கினர். ஜனா சாப்பிட்டு விட்டுப்படுத்துக் கொண்டான்.

சுருதிநான் இங்கே ஓய்வெடுக்கிறேன். நீஊருக்குள் சென்று வியாபாரம் செய்துவிட்டு வா!'' என்று கூறிநண்பனை அனுப்பி வைத்தான்.

சுருதிமிகவும் வெகுளி. யார் எதைச்சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவான். இக்கட்டில் மாட்டிக் கொண்டு விழிப்பான். இருந்தாலும்அவனிடம்தான் காசு இருந்தது.

ஆயிரம்பொற்காசுகளை குதிரையின் சேணத்தில் மறைத்துக் கொண்டு குதிரையில் ஏறிநகரை நோக்கிச் சென்றான்.

ஊருக்குள்சென்றதும் வீதியில் எதிரே ஒருவன் வந்தான்.

இந்தக்குதிரை விலைக்குக் கிடைக்குமா?'' என்று கேட்டான்.

விலைக்குத்தரத் தயார். விலை மிகஅதிகம். உன்னால் கொடுக்க முடியுமா? நீ என்ன தொழில் செய்கிறாய்?'' என்று வினவினான் சுருதி.

என் பெயர் வில்லன். ஆடுகளைவெட்டி இறைச்சி விற்கும் கசாப்புக்கடைநடத்துகிறேன். விலையைக் கூறு?'' என்றான் வில்லன்.

இதன் விலை ஐந்நூறுபொற்காசுகள்!''

உயர்தரமானஅரேபியக் குதிரைகளே இருநூறு பொற்காசுகளுக்குக்கிடைக்கின்றன. உன் குதிரை பெரியஅதிசயக் குதிரையா? சரி பரவாயில்லை. இதோநீ கேட்ட ஐந்நூறுபொற்காசுகள். குதிரையைக் கொடு'' என்றான். ஐந்நூறு பொற்காசுகளை எண்ணியும்கொடுத்தான்.

பொற்காசுகளைப்பெற்றுக் கொள்வதற்காக சுருதி குதிரையை விட்டுஇறங்கினான். பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டான். பிறகு குதிரையின் சேணத்தில்தான் வைத்திருந்த பணப்பையை எடுக்கச் சென்றான்.

இந்தக்குதிரையைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டேன். இப்போது குதிரை எனக்குச் சொந்தம். குதிரையோடு உள்ள பொருட்கள் யாவும்எனக்கே சொந்தம்'' என்று கூறிவிட்டு குதிரைமேல்ஏறிச் சென்றுவிட்டான்.

ஆயிரம்பொற்காசுகளை இழந்த சுருதி மிகுந்தஏமாற்றத்துடன் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தான். நடந்தவற்றைநண்பனிடம் கூறினான். அவனைப் பார்க்கப் பரிதாபமாகஇருந்தது. அவனுடைய சோகக் கதையைக்கேட்ட ஜனா ஏளனமாகச் சிரித்தான்.

இந்த ஊரினர் பயங்கர எத்தர்களாகஇருப்பர் போலும். இருக்கட்டும். உன்னிடம்குதிரையை வாங்கியவனின் பெயர் என்ன?'' என்றுகேட்டான் ஜனா.

கசாப்புக்கடைவில்லன்!'' என்றான்.

உடனே நண்பனிடம் இருபத்தி ஐந்து பொற்காசுகளை வாங்கிக்கொண்டு வில்லனின் கசாப்புக் கடையின் முன்பாகப் போய்நின்றான். கடையில் நான்கைந்து ஆட்டுத்தலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. கடைத் திண்டில் வில்லனின்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.

ஒரு தலையின் விலை என்ன?'' என்று கேட்டான்.

ஒரு தலை ஒரு பொற்காசு.''

எத்தனைதலைகள் வேண்டுமானாலும் கிடைக்குமா?''

ஆகா.... தாராளமாகக் கிடைக்கும்!''

இதோ இருபத்தி ஐந்து பொற்காசுகள். இருபத்திஐந்து தலைகள் கொடு!''

இப்போதுஇங்கே இருக்கும் தலைகளை எடுத்துப் போ. மீதியை நீ இருக்குமிடத்தைச் சொல். அங்கே அனுப்பி வைக்கிறேன்.''

அதெல்லாம்முடியாது. இங்கு தொங்கும் தலைகளுடன்கடையில் உள்ள உன் குழந்தைகளின்தலையையும் வெட்டிக் கொடுக்க வேண்டும். தலைகள்என்றுதான் பேசினோம். ஆட்டுத்தலைகள் என்று கூறவே இல்லை. எனக்குக் குழந்தைகளின் தலைகளையும் கொடுக்க வேண்டும்!'' என்றான்.

கசாப்புக்கடைக்காரன்அதிர்ச்சியில் நடுங்கினான். "இவன் நம்மைவிடக் கில்லாடியாகஇருக்கிறானே! எக்கச்சக்கமாக வாக்குக் கொடுத்து வசமாக மாட்டிக் கொண்டோமே!' என்று மிகவும் பதறிப் போனான்.

ஐயா! ஏதோ முட்டாள்தனமாக வாக்குக்கொடுத்து விட்டேன். மன்னித்துக் கொள்!'' என்று கெஞ்சினான்.

சேச்சே.... நீ கூறுவது எதையும் என்னால்ஏற்றுக் கொள்ள முடியாது. முதலில்தலைகளைக் கொண்டு வா!'' என்றுகடுமையாகக் கூறினான் ஜனா.

அப்போதுதான்தான் காலையில் குதிரையை ஏமாற்றி வாங்கியது நினைவிற்குவந்தது. ஏமாந்தவனின் நண்பன் இவன் என்பதைபுரிந்து கொண்டான். இவனிடம் தனது ஜம்பம்பலிக்காது என்பதைப் புரிந்து கொண்டான்.

ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். வெளியூர்க்காரர் தானே என்று நினைத்துகுதிரைக்காரரான உமது நண்பரை ஏமாற்றிவிட்டேன். குதிரையையும் சேணத்தில் இருந்த ஆயிரம் பொற்காசுகளையும்தந்து விடுகிறேன். என்னை இத்துடன் விட்டுவிடுங்கள்'' என்று மன்றாடினான்.

சரியெனச்சம்மதித்து குதிரை மற்றும் பணப்பையுடன்ஜனா சத்திரத்திற்குத் திரும்பினான். நண்பனின் ஆற்றலை எண்ணி வியந்தான், தானும் ஜனாவைப் போல் புத்திச்சாலியாகமாற தீர்மானித்தான் சுருதி.
சிறுவர் கதைகள் – எத்தனுக்கு எத்தன்! சிறுவர் கதைகள் – எத்தனுக்கு எத்தன்! Reviewed by haru on August 30, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]