பஞ்சதந்திர - சிறுவர் நீதிக்கதைகள் - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு:-
கோவில்கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும்சில வெள்ளை நிறப் புறாக்களும்அடைக்கலமாகி இருந்து வந்தன.
கோபுரத்தில்கும்பாபிஷேக வேலைகள் தொடங்கஆரம்பித்ததால் இது நாள் வரைஎதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப்புறாக்கூட்டமும் இப்போது ஒன்று கூடிவேறொரு இடம் தேடி புறப்பட்டன.
செல்லும்வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களைதின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில்அமர்ந்தன.
தானியத்தைஉலர்த்தும் பொருட்டு பரப்பிவிட்டு சென்ற வேடன் தானியமணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்துவேடன் என்ன நடந்தது என்பதைஊகித்தான்.
நாளைக்குஇந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துஅதன்படி மறுநாள் தயார் செய்துவலை விரித்தான்.
அடுத்தநாள் அங்கே வந்த புறாக்கள்தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில்வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சிலமணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்குபுரிந்து கொண்டு புறாக்களை பிடிக்கஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்தபுறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள்எல்லாம் ஒன்றாக இறக்கையைவிரித்து பறக்க, வலையோடு புறாக்கள்பறக்க ஆரம்பித்தன.
உடனே வேடன், ``அய்யய்யோ.... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்தவலையும் அதோடு போகிறதே....'' என்றுபுலம்பிக் கொண்டே, பறந்து செல்லும்புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்துசெல்லும்போதே, அதில் இருந்தவெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, ``எங்களது வலிமையால்தான் நீங்களும்காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிகவேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்.... அவ்வளவுதான்'' என்று கூறின.
உடனேநீல நிறப் புறாக்களும் தன்பங்குக்கு, ``நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்றுகூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம்குறைய ஆரம்பித்து, ஒருமரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.
இதனைப்பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ``ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்றபழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பிவிடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக "ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வுஎன்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளைதனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.
நீதி : எப்பொழுதும் ஒற்றுமையே சிறந்தது!
நீதி : எப்பொழுதும் ஒற்றுமையே சிறந்தது!
பஞ்சதந்திர - சிறுவர் நீதிக்கதைகள் - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Reviewed by haru
on
August 14, 2012
Rating:
Reviewed by haru
on
August 14, 2012
Rating:



No comments