சிறுவர் நீதிக்கதைகள் - தேவதையின் தீர்ப்பு
தேவதையின் தீர்ப்பு:-
அது ஓர் அழகிய பனிக்காலம்.
ரவியும்சீதாவும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். இருவரும்ஒரே வகுப்பு. படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடிவிவாதங்கள் வருவதுண்டு. காரணம், அவர்களில் யார்பெரியவர் என்று. அதை நிரூபிக்க, இருவரும் போட்டி போட்டுக் கொண்டுபடிப்பதும் உண்டு.
அன்றும்அப்படித்தான் ரவியும் சீதாவும் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே விவாதம் முற்றியது.
ரவி சொன்னான், “நான்தான் உன்னை விட அறிவில்சிறந்தவன்'' என்று.
ஆனால் சீதாவோ, அதை மறுத்தாள். “நிச்சயமா இல்லை.. நாந்தான்'' என்றாள் ஆணித்தரமாக. அதற்குச்சான்றாக அவரவர் தங்கள் பிரதாபங்களைசுட்டிக் காட்டிக்கொண்டிருந்தனர். இதே ரீதியில் பேச்சுவளர்ந்து கொண்டிருந்தது.
அப்போதுதிடீரென அவர்கள் முன் தோன்றியதுஓர் அழகிய தேவதை. தேவதையைக்கண்ட இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பின் இருவரும் சுதாரித்துக்கொண்டு, “நீங்கள் யார்?'' என்றனர்.
தேவதை அவர்களிடம், “நான் தேவலோகத்து மங்கை. இந்த வழியாகத்தான் தினமும் பறந்து உலாசெல்வேன்... இன்றும் அவ்வாறு போகும்போதுஉங்களது வாக்குவாதம் கேட்டது. பொறுக்கமுடியாமல் இறங்கி வந்தேன்'' என்றது.
பின், “உங்களுக்குள் என்ன பிரச்சினை? என்னிடம்சொல்லுங்கள்.. முடிந்தால் தீர்த்து வைக்க முயற்சிக்கிறேன்'' என்றது.
உடனே ரவி, “தேவதையே! இவளைவிடநான்தான் அறிவில் சிறந்தவன் என்றால்ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறா'' என்றான்.
“ஒண்ணும்கெடயாது... நாந்தான் இவனை விட அறிவாளி..'' என்று சீதா சொல்ல, ரவிமறுக்க, சூடான விவாதம் மீண்டும்தொடங்கியது.
இதைக் கண்ட தேவதை வருந்தியது. ஒரு கணம் யோசித்தது.
“சரி, சரி... உங்கள் சண்டையைசற்று நிறுத்துங்கள். இதற்கு நான் ஒருவழி செய்கிறேன்'' என்று கூறியது.
“உங்கள்இருவருக்கும் நான் ஒரு போட்டிவைக்கிறேன். அதில் யார் வெற்றிபெறுகிறீர்களோ, அவர்தான் அறிவில் சிறந்தவர்'' என்றுகூறி, “உங்களுக்கு இதில் சம்மதமா?'' என்றுகேட்டது.
ரவியும்சீதாவும் "சம்மதம்' எனத் தலையாட்டினர்.
உடனே போட்டி என்ன என்பதைதேவதை அவர்களிடம் சொல்ல ஆரம்பித்தது. “நான்உங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு குடுவைதருகிறேன். இது பனிக்காலம் அல்லவா? அந்தக் குடுவையில் இரவு முழுவதும் பனித்துளிகளைச்சேமிக்க வேண்டும். இருவரில் யார் அதிகம் சேமிக்கிறீர்களோஅவர்தான் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்'' என்று கூறியது.
“ஆனால்ஒரு நிபந்தனை. இத் தருணத்திலிருந்து போட்டிமுடியும் வரை நீங்கள் ஒருவருக்கொருவர்பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது. நான் நாளைமாலைதான் மீண்டும் வருவேன். இதே மைதானத்தில் எனக்காகக்காத்திருங்கள்'' என்று கூறி, மூடியில்லாதஇரு குடுவைகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு மறைந்தது.
இருவரும்குடுவையுடன் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். செங்கதிர் சூரியன் மறைந்து, பால்ஒளி வீசும் இரவு ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பனியும் கொட்ட ஆரம்பித்தது. ரவி குடுவையை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தான். திறந்தவெளியில் வைத்தான். பின் உறங்கச் சென்றான். ஆனால் உறக்கமே வரவில்லை. அடிக்கடிசென்று குடுவையில் பனித்துளிகள் சேர்ந்துள்ளதா எனப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
சீதாவும்அவளது வீட்டின் முன்புறம் உள்ள புல்தரையில் குடுவையைவைத்தாள். இடையிடையே பனித்துளியின் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். "நாளை எப்படியாவது ரவியைஜெயிக்கணும்' என்ற சிந்தனையிலேயே அவள்தூங்கிப்போனாள்.
மறுநாள்பொழுது புலர்ந்தது.
சீதாவும்ரவியும் சென்று அவரவர் குடுவையைப்பார்த்தனர். ஓரளவுக்கு இருவரது குடுவையிலும் பனிநிறைந்திருந்தது. ஆனால் ரவியின் குடுவையில்இதை விட அதிகம் இருக்குமோஎன்று சீதாவும், சீதாவின் குடுவையில் அதிகம் இருந்தால் என்னசெய்வது என்று ரவியும் நினைத்தனர்.
மதியத்துக்குமேல் இருவரும் மைதானத்துக்கு தேவதையைப் பார்க்கக் கிளம்பினர். அப்போது மற்றவரது குடுவையில்அதிகமாக இருந்தால் நாம் தோற்றுவிடுவோமே என்றுஇருவருமே நினைத்ததால், குடுவை நிறையத் தண்ணீரைஊற்றி எடுத்துச் சென்றனர்.
மைதானத்தில்ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் குடுவையைமறைத்துவைத்தபடி காத்திருந்தனர். மாலை ஆனதும் தேவதைவந்தது.
“சரியாகவந்துவிட்டீர்களே! எங்கே உங்கள் குடுவையைக்காட்டுங்கள்'' என்று குடுவைகளை வாங்கிப்பார்த்தது.
பின்னர்வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தது தேவதை. இதைக் கண்ட இருவரும் புரியாமல்ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு ரவி கேட்டான்,
“ஏன் இப்படிச் சிரிக்கிறீங்க?'' என்று.
அதற்குப்பதில் சொல்லாமல் மீண்டும் சிரித்த தேவதை, “சாதாரணமாகபனித்துளி என்பது என்ன தெரியுமா? மேலே உள்ள நீராவியின் மேல்குளிர்ந்த காற்றுப் படும்போது, அது பனித்துளியாக மாறுகிறது. அந்தப் பனித்துளி மீது நல்ல வெயில்படும்போது, அது மீண்டும் நீராவியாகிவிடும். அப்படிப் பார்த்தால் நீங்கள் மதியத்திலிருந்து இங்கேகாத்திருக்கிறீர்கள்.
என்னதான் குடுவையில் பனித்துளி சேர்ந்திருந்தாலும் இந்த வெயிலில் சிறிதளவாவதுஆவியாகியிருக்கும். மீதிக் கொஞ்சம்தான் குடுவையில்தங்கியிருக்கும். ஆனால் உங்கள் இருவரதுகுடுவையும் நிரம்பி வழிகிறதே! இதுஎப்படி? இதைக் கண்டு சிரிக்காமல்என்ன செய்வது?'' என்று கூறியது.
“இப்போதுசொல்லுங்கள்.. உங்களில் அறிவில் சிறந்தவர் யார்என்று?'' என்று அவர்களைப் பார்த்துக்கேட்டது தேவதை.
இருவரும்என்ன செய்வது என்று தெரியாமல்தலைகவிழ்ந்து நின்றனர்.
“பார்த்தீர்களா? இது நம் வாழ்வில் தினமும்நிகழும் ஒரு சாதாரண நிகழ்வு. இதைக்கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. உங்களுக்கு ஒன்றுசொல்கிறேன். "இந்த உலகில் எல்லாமேதெரிந்தவர்கள், புத்திசாலிகள் என்று எவருமே இல்லை. இந்த உலகத்தில் உள்ளவர்கள் கற்றுக்கொண்டது வெறும் கையளவு மட்டுமே. கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்ளத்தான் நீங்கள் முயற்சிக்க வேண்டுமேதவிர, இப்படி வீண் விவாதங்கள்செய்து நேரத்தை வீணடிப்பது எவ்வகையில்சிறந்ததாகும்?'' என்று கேட்டது தேவதை.
அதைக் கேட்ட இருவரும் தம்தவறை உணர்ந்து, “எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள்இனிமேல் இதுபோன்ற தவறுகளை எல்லாம் செய்யமாட்டோம்'' என்று கூறினர்.
பின் தேவதை அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு ஏதாவது பரிசு தரவிரும்புகிறேன். என்ன வேண்டும்? கேளுங்கள்'' என்றது.
“நீங்கள்கொடுத்த இந்த அறிவுரையே எங்களுக்குவிலைமதிக்க முடியாத பரிசு'' என்றுஒரே குரலில் கூறினர்.
“உங்களதுஇந்தப் பரிசை எங்களது மற்றநண்பர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் நல்வழிப்படுத்துவோம்'' என்றாள் சீதா.
“மாணவர்களாகியநீங்கள்தான் இந்த பூலோகத்தின் தூண்கள். தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் கொண்டு வெற்றி பெறவாழ்த்துகள்'' என்று கூறி மகிழ்ச்சியுடன்மறைந்தது தேவதை.
ரவியும்சீதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் உண்மையான நட்புடன்.
சிறுவர் நீதிக்கதைகள் - தேவதையின் தீர்ப்பு
Reviewed by haru
on
August 14, 2012
Rating:
No comments