சிறுவர் நீதி கதைகள் - யார் அழகு?
யார் அழகு?
ஓரிடத்தில்இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்றுநன்றாகப் பழகி வந்தன.
ஆனாலும்அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடிவிவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன்பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும்மவுனமாக இருக்கும்.
“நம் நால்வரில் நான் தான் மிகஅழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான்தோன்றியதாகச் சொல்வார்கள்!'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியதுகுரங்கு.
“நாங்கள்மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!'' என்றதுஎலி.
“மனிதர்கள்திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூடஉங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான்சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின்நிறத்தில் அதைப் போன்றே அழகாகஇருக்கிறேன்!'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.
“நான் இந்த அழகுப் போட்டிக்கேவர வில்லை!'' முயல் சொல்ல, மூன்றும்சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தைவிட்டு அகன்றது.
“என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல்ஓடி வரும் அழகே தனிதான்!'' குரங்கு சொல்லியது.
“ஆமாம்... ஆமாம்...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.
“நிறமும்அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ளமுடியும்'' என்றது எலி.
“எனக்கொருயோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டிநடத்தினால் என்ன?'' கேட்டது வெட்டுக்கிளி.
“போட்டிநடத்தலாம். ஆனால் நடுவர் யார்?'' சந்தேகம் எழுப்பியது எலி.
“நடுவராகநானிருக்கிறேன்!'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின்மீது ஒரு காகம் இருந்தது.
“நீங்கள்எப்படி?'' ஆச்சரியப்பட்டது குரங்கு.
“நீங்கள்மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான்கேட்டேன். முயலையும் அழைத்துக்கொண்டு நாளை என் இருப்பிடம்தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரைஅழகு ராணியாக அனைவரும் ஒருமனதாகஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என்றுகாகம் தன் முகவரி கூறியது.
“அப்படியேசெய்கிறோம்..'' அனைத்தும் சேர்ந்துகுரல் கொடுத்தன.
மறுநாள்அனைத்தும் அழகிய அழகுராணி கனவில்மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டுஇருந்தன.
அப்பொழுதுகுருவி ஒன்று வலியால் துடித்துக்கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம்தெரிந்தது.
“எனக்குயாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்துகாலில் காயப்படுத்தி விட்டான்!'' குருவி பல கீனமாகஉதவி கேட்டது.
“நாங்கள்அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!'' கடுமையாக கூறியது குரங்கு.
குருவியைப்பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்றுவிட்டன. முயல் குருவி அருகேதயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாகமருந்து தேடிக் காலில் வைத்துவிட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.
அழகிப்போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல்மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள்மகிழத் தொடங்கின.
“அழகுக்கும்அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனிஉங்கள் நல்ல குணம் பார்த்துமதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கிஇருக்கிறேன்!'' காகம் கூறியதும் குருவிக்குஉதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.
அப்பொழுதுஅரக்கப் பரக்க முயல் ஓடிவந்தது.
“முயல்தான்அழகு ராணி! இதை அழகுராணியாகத்தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒருஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்றுமுன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றதுபற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும்நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில்அழகானவர்கள்!'' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள்அஷ்டகோணலாகின.
நீதி : நம் யார்க்கவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்கு எதிர்பாரத பயனைத்தரும்.
சிறுவர் நீதி கதைகள் - யார் அழகு?
Reviewed by haru
on
August 14, 2012
Rating:
Reviewed by haru
on
August 14, 2012
Rating:



No comments