Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் – மேதைகள்

மேதைகள்:-

முன்னொருசமயம் விஷ்லர் என்ற ஓர்ஓவிய நிபுணர் இருந்தார். அவர்ஓவிய நிபுணர் மட்டுமல்ல. தலைசிறந்த மேதையும் கூட. அவர் வசித்துவந்த ஊரில் மற்றொரு ஓவியர்ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரோசெட்டிஎன்பதாகும்.

ஒரு நாள் விஷ்லர், ரோசெட்டியின்வீட்டுக்குச் சென்று இருந்தார். ரோசெட்டிஅவரிடம் அப்போது தான் வரைந்துகொண்டிருந்த ஓர் ஓவியத்தை எடுத்துவந்து காட்டினார். அது பற்றி விஷ்லரின்அபிப்ராயத்தை அவர் கேட்டார். விஷ்லர்அந்த ஓவியத்தைப் பார்த்தார்.

உண்மையிலேயே அந்த ஓவியம் மிகஅற்புதமாக இருந்தது. ஆகவே, அவர் ரோசெட்டியைமனம் திறந்து பாராட்டினார். உண்மையில்அப்போது ரோசெட்டி அந்த ஓவியத்தை முழுதாகமுடிக்கவில்லை.

வண்ணம் தீட்ட வேண்டிய இடங்கள்நிறைய இருந்தன. ஆகவே அவர், “இந்தந்தப்பகுதிகளில் வண்ணம் தீட்டியிருந்தால் இன்னும்அற்புதமாக இருக்குமே...'' என்று தன் அபிப்ராயத்தைத்தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களிலே அந்தப்பணியும் முடிந்து விடும். நீங்கள் இன்னும்இரண்டு மூன்று நாட்கள் கழித்துஇங்கு வந்திருந்தால் முழுமை பெற்ற படத்தைப்பார்த்திருப்பீர்கள்...'' என்று ரோசெட்டி பதில்கூறினார்.

ஒரு வாரம் ஆயிற்று. தற்செயலாகஅவரைக் கடை வீதியில் சந்தித்தார்விஷ்லர்.

என்ன மிஸ்டர் ரோசெட்டி, உங்களுடையபடம் எந்த அளவில் இருக்கிறது?'' என்று அவர் கேட்டு வைத்தார்.

அந்தப் படம் நிறைவு பெற்றுவிட்டது. இப்போது அந்தப் படத்துக்குச் சட்டமிடுவதற்காகஒரு சட்டத்தைச் செய்யச் சொல்லி இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் வந்து, சட்டமும்இட்டுவிட்டால் அந்தப் படம் பூரணநிறைவு பெற்றுவிட்டது என்று பொருள்,'' என்றுகூறினார்.

இரண்டொரு வாரங்கள் கழிந்தன. தற்செயலாக விஷ்லர், ரோசெட்டி வீட்டுக்குச் சென்றார். பேச்சுக்கிடையே, “சட்டம் வந்து சேர்ந்துவிட்டதா? நீங்கள் பூரண நிறைவுபெறும்படி ஓவியத்தைச் செய்து விட்டீர்களா?'' என்றுகேட்டார்.

முடித்து விட்டேன்! வாருங்கள் காட்டுகிறேன்,'' என்று ரோசெட்டி அவரைஅழைத்துச் சென்று சட்டமிடப்பட்ட தன்ஓவியத்தைக் காண்பித்தார்.

அந்த ஓவியத்தைச் சுற்றி மிக அழகானசட்டம் ஒன்று இடப்பட்டிருந்தது.

ஆஹா! சட்டமும் அற்புதம்!'' என்று பாராட்டினார் விஷ்லர்.

அதன் பிறகு என்ன செய்தீர்கள், புதிய ஓவியம் ஏதாவது வரைந்தீர்களா?'' என்று கேட்டார் விஷ்லர்.

இல்லை. அதற்கான அவகாசம் எனக்குஇல்லை!'' என்றார் ரோசெட்டி.

விஷ்லர் ஆச்சர்யம் அடைந்தார்.

ஓவியம் வரைவது உங்கள் வேலை. ஆனால், ஓவியம் வரையவில்லை. இந்தஓவியமும் முடித்துவிட்டீர்கள். அப்படி இருக்க அவகாசம்இல்லை என்று கூறுகின்றீர்களே! இதுஎன்ன அதிசயம்!'' என்று கூறினார்.

மிஸ்டர் விஷ்லர் நான் ஓவியம்வரையத்தான் அவகாசம் இல்லை என்றேன். அதற்காக நான் ஓய்வெடுக்கவில்லை!'' நான்வரைந்த ஓவியத்தைப் பற்றி அழகான கவிதைஒன்றை எழுதினேன். கவிதை எழுதவே இத்தனைநாட்களாயிற்று!'' என்று கூறினார்.

கவிதையா?'' என்று ஆச்சர்யமடைந்த விஷ்லர்எங்கே காட்டுங்கள்?'' என்றார். அவர் மிகப் பெரியமேதையல்லவா?

ரோசெட்டி கவிதையை எடுத்து வந்துதனக்கே உரித்தான கம்பீரமான குரலில் ஏற்ற இறக்கங்களுடன்சரியான பாவனையுடன் அதைப் படித்துக் காட்டிவிட்டு விஷ்லரிடம் தந்தார்.

விஷ்லர் கவனமாக அதைக் கேட்டார். பின் தானே ஒருமுறை படித்துப்பார்த்தார்.

உங்களுடைய ஓவியத்தை விட இந்தக் கவிதைஅபாரம்; அற்புதம். நல்ல கற்பனை! நீங்கள்அந்த ஓவியத்தைச் சட்டத்திலிருந்து எடுத்து விட்டு இந்தக்கவிதைக்குப் போடுங்கள் அந்தச் சட்டத்தை!'' என்றுகூறினார்.

நீதி : மற்றவர்களின் திறமையை நாம் பாராட்டவேண்டும், அந்த மனநிலை நம்மிடம்இருந்தால் நாம் மாமேதையாக திகழலாம்.
சிறுவர் நீதிக்கதைகள் – மேதைகள் சிறுவர் நீதிக்கதைகள் – மேதைகள் Reviewed by haru on August 16, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]