Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் – ராஜா நல்ல ராஜா!

ராஜா நல்ல ராஜா!

நாட்டரசன்புரம்என்ற நாட்டை மார்த்தாண்டன் என்றமன்னன் ஆண்டார். அவர் தனது நாட்டில்பல சிரமங்களுக்கிடையில் மிகப்பெரிய பூந்தோட்டம்ஒன்றை அமைத்தார். அதில் எல்லாவகையான பூச்செடிகளையும்வளர்த்தார்.

பல நிறத்தில் பூமரங்களையும் அமைத்தார். பூமரங்களை ஒட்டி நல்ல காய், கனிகளைத் தரும் மரங்களையும் அமைத்தார். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்றபுற்களையும், புல்லின் நடுவே தரையில் படரும்சிறிய பூச்செடி வகையும் வளர்த்தார்.

மரங்களிலும்புதர்களிலும் உயர்ந்த சாதிப் பறவைகளையும், முயல், அணில் போன்றவைகளையும் வளர்த்தார். வைரத்தை தங்கத்தில் பதித்தது போல பொன்னிற புள்ளிமான்கள் அந்தத் தோட்டத்தில் அங்குமிங்கும்துள்ளியோடின.


அந்தத்தோட்டத்தைக் கண்டால் மனம் அமைதியடையும். கவலைகள் மறந்து போகும். அப்படிஒரு அற்புதமாக அந்த தோட்டம் அமைந்துஇருந்தது. அந்தத் தோட்டத்தைக் காணவும், ரசிக்கவும் பல தேசத்து ராஜாக்களும்சிற்றரசர்களும் வருவர்.

அவர்களைமன்னர் வரவேற்று உபசரிப்பார். அவர்கள் தோட்டத்தைச் சென்றுகாண்பர்; பிரமிப்பர். இத்தனை பெரிய இடத்தைவளைத்து இத்தனை எழிலான ஒருதோட்டத்தை அமைக்க முடியுமா? என்றுவியப்பர். எனினும் அந்தத் தோட்டத்தைச்சுற்றி பார்த்துக் கொண்டே வரும் போதுஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது முகம் சுளிப்பர்.

ஏனென்றால்அந்த இடத்தில் ஒரு பிரிந்தும் பிரியாததுமாககிழிந்த காய்ந்த, ஓலைகளுடன் கூடிய ஒரு சிறுகுடிசை இருந்தது. அந்தக் குடிசையின் சுற்றுச்சுவர்கள் வெறும் களிமண்ணால் பிசைந்துகட்டப்பட்டு இருந்தது. அந்த ஓலைக் குடிசையைசுற்றி துவைக்கும் கல்லும், முக்கூட்டுக் கற்களால் அடுக்கப்பட்ட ஒரு சிறு அடுப்பும், ஏழெட்டு நைந்து போன துணிமணிகளும், அலுமினியக் குவளைகளும் கிடக்கும். குடிசையை சுற்றி நாகவாளி செடிநிறைந்து இருக்கும்.

இத்தனைஅற்புதமான ஒரு தோட்டத்தின் நடுவேஇத்தனை கோரமான பஞ்சக்குடிசை ஒன்றுஏன் உள்ளது என்ற யாருக்குமேபுரியவில்லை. எனினும் அந்தக் காரணத்தைபேரரசரிடம் கேட்கும் தைரியமோ அல்லது அந்தக்குடிசை இருப்பது தோட்டத்தின் எழிலைக் கெடுப்பதாக உள்ளதுஎன்று கூறவோ யாருக்கும் துணிவேவரவில்லை.

நாட்கள்சென்றன. மகிபாலன் என்றொரு சிற்றரசன் அந்ததோட்டத்தைக் காண வந்தான். வழக்கம்போல மன்னருடன் சேர்ந்து தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபடி அரசனைப் பலவிதமாகப் புகழ்ந்தபடிவந்தான்.

திடீரெனஅவன் கண்கள் குடிசையைக் கண்டது. உடனே முகம் வாடினான். அத்தனைஎழிலான தோட்டத்தில் இப்படி ஒரு ஏழ்மைதோற்றமுடன் கூடிய குடிசை ஒன்றுஇருப்பதற்கு ஏதோ ஒரு காரணம்இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

உடனே அரசரிடம், “மன்னா இந்த எழிலானதோட்டத்தில் இப்படியொரு எளிய குடிசை இருப்பதன்காரணம் என்ன?'' என்று கேட்டான்.

உடனே மன்னன், “மகிபாலா! இந்த குடிசை உன்னைப்போன்ற ஒரு தைரியசாலியின் குடிசை. நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்இந்தத் தோட்டத்தை உருவாக்க முயன்றபோது ஒரு பெரிய பரப்பளவுடன்கூடிய இடம் எனக்கு மிகவும்அவசியமாகியது. நாடு முழுக்க அமைச்சர்அந்த மாதிரி ஒரு இடத்தைத்தேடிய போது இந்த இடம்அகப்பட்டது. ஆனால், பெரிய இடத்திற்குநடுவே இந்த குடிசையும் இருந்தது.

இதில்இருந்த ஏழைக் கிழவியிடம், நீஇந்தக் குடிசையை காலி செய்ய வேண்டும். இங்கு மன்னர் மிகப் பெரியபூந்தோட்டம் அமைக்க இருக்கிறார்,'' என்றுகூறியபோது கிழவி மறுத்திருக்கிறாள்.

விபரமறிந்தநான் நேரில் வந்து, “இடத்தைகாலி செய்,'' என்று கூறினேன்.

ஆனால் அந்த பெண்ணோ, “மன்னா! இது என்பாட்டன் பூட்டன் காலத்து குடிசை. இதைத் தாங்கள் அழிப்பதை நான்விரும்பவில்லை. என் உயிரே போனாலும்இதனை இடிக்கவோ, ஓலைகளைப் பிரித்தெறியவோ நான் மனதார ஒப்புக்கொள்ள மாட்டேன். படைபலம் நிறைந்த நீங்கள்நினைத்தால் என்னை ஒரே நிமிடத்தில்கொன்றுவிடலாம்.

நான் இறந்த பின்பு இந்தஇடத்தை நீங்கள் இடித்து, சிதைத்துஉமது தோட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், நான் இறந்தாலும்எனது பூர்வீகக் குடிசையை அழித்து என் மனதில்வேதனையை ஏற்படுத்தியதற்காக தங்களுக்கு இறைவன் நிச்சயம் தண்டனையைத்தந்தே தீருவார்,'' என்று கூறி அழுதார்.

அவள் கண்ணீரில் இருந்த நியாயமும் பூர்வீகநினைவுச் சின்னத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் மனோ தைரியத்தால் என்னைஎதிர்த்து அவள் பேசிய வீரமும்என் மனதை நெகிழ வைத்தது. அவள் மன உணர்வை மதித்து, நான் இந்தக் குடிசையை அகற்றாமல்இந்தத் தோட்டம் உருவாக்கிய நான்கு, ஐந்து ஆண்டுகளில் அந்தக் கிழவி இறந்துவிட்டாள்.

அவளுக்குப்பின் இந்தக் குடிசையை ஆளயாரும் சந்ததிகள் இல்லை. என்றாலும் அந்தக்கிழவியின் உணர்வுக்கும், வீரத்திற்கும் ஒரு மதிப்பு தரஎண்ணி இந்தக் குடிசையை அகற்றவில்லை,'' என்றார்.

பேரரசரின்பெருந்தன்மையையும், நல்ல பண்பையும் மகிபாலன்வியந்து பாராட்டினான்.

நீதி : மனிதர்களாகிய நாம் மற்றவர்களின் மன உணர்வுகளை மதிக்க வேண்டும். யாரையும் மனம் நோகச் செய்தல் தவறு. மன்னரின் பெருந்தன்மையான குணத்தை நீங்களும் கடைபிடிக்க வேண்டும்.
சிறுவர் நீதிக்கதைகள் – ராஜா நல்ல ராஜா! சிறுவர் நீதிக்கதைகள் – ராஜா நல்ல ராஜா! Reviewed by haru on August 16, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]