Ads Below The Title

ஒப்பிடாதே! | What's The Difference - ஜென் கதைகள் (Zen Master Story)

ஒப்பிடாதே! - ஜென் கதைகள்

(What's The Difference) - Zen Master Stories


ஒரு ஊரில் ஜென் மதத்துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணிகூட இல்லை. இருந்த உடையும்கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள்அலை அலையாகத் திரண்டு வந்தனர்.

கூட்டத்தில்மிகப் பெரும்பாலானோர் அந்தத் துறவின் கால்களைத்தங்கள் கைகளினால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

ஜென் துறவியின் புகழ் பரவியது. இதுமெல்ல மெல்ல அரண்மனை வரைசென்றது. இந்தத் துறவியைப் பற்றிஅந்நாட்டுத் தளபதி கேள்விப்பட்டான். அவனுக்குஎரிச்சலாக இருந்தது. உடனடியாகத் தான் அந்தச் சாமியாரைக்கண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

ஒப்பிடாதே! : ஜென் கதைகள் - What's The Difference : Zen Storyஅவன் கண்டிக்க நினைத்ததற்கு வேறு ஒரு முக்கியக்காரணமும் இருந்தது.

"நான்தான்அந்த நாட்டிலேயே முக்கியமானவன், தனக்கு அப்படிப்பட்ட புகழ்வாய்க்காமல், கேவலம் ஒரு சன்னியாசிக்குஇப்படிப்பட்ட புகழ் கிடைத்துள்ளதே'' என்றபொறாமைதான்.

அவன் அன்றைய தினமே அந்தத்துறவியைக் காண்பதற்குச் சென்றான். "தளபதி வருகிறார்' என்றவுடன்துறவியைச் சுற்றி இருந்த கூட்டம்வழி விட்டு ஒதுங்கி நின்றது.

துறவியைமேலிருந்து கீழ் வரை உற்றுநோக்கினான்.

நான் இந்த நாட்டின் தளபதி. விதம் விதமான ஆயுதப் பயிற்சிகளைப்பெற்ற பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் என்னிடம்உண்டு. நான் அரண்மனைக்குள் நுழைந்தால், தெருவில் நடந்தால், எல்லாரும் என்னைத் தெய்வம் போலக்கருதிக் கை எடுத்து வணங்குவார்கள்.

இப்போதுஎன்னவென்றால், பார்க்கப் பிச்சைக்காரனைப் போலத் தோற்றமளிக்கக் கூடிய, அடுத்த வேளைச் சாப்பாட்டு கூடஇல்லாத உன்னை ஒரு பொருட்டாகமதித்து, அதிக மரியாதை கொடுத்துக்கால்களில் விழுந்து வணங்கிச் செல்கிறார்கள். அதுதான் ஏன், ஏதற்காகஎன்று எனக்குப் புரியவில்லை,'' என்றான்.

அவனுடையபேச்சை ரசித்துக் கேட்ட அந்தத் துறவிஅவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குப்பின்னாலிருந்த ஒரு பூந்தோட்டத்துக்கு வந்தார். அதில் வண்ண வண்ண மலர்கள்மலர்ந்திருந்தன.

அன்றையதினம் பவுர்ணமியாதலால் முழு நிலவு தன்வெளிச்ச முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

வானத்தில்ஒளிரும் நிலவைச் சுட்டிக்காட்டி, "அது என்ன?'' என்று கேட்டார் துறவி.

அதுவா, அது நிலவு!'' என்றான் தளபதி.

பின்னர்துறவி தன் அருகே பூத்திருந்தஒரு ரோஜா மலரைச் சுட்டிக்காட்டி"இது என்ன?'' என்று கேட்டார்.

தளபதி எரிச்சல் அடைந்தான். இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “இதுரோஜாப் பூ!'' என்றான்.

இந்த ரோஜாப்பூ என்றைக் காவது ஒருநாள்அந்த நிலவைப் பார்த்து, "ஆஹாஇந்த நிலவு எத்தனை அழகு! இதைச் சுற்றி எவ்வளவு ஒளிவெள்ளம்! நான் அந்த நிலாவைப்போல அவ்வளவு வெண்மையாக இல்லையேஎன்று ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா இல்லை அல்லவா? அதேபோல அந்த நிலவு கீழேஉள்ள இந்த ரோஜா மலரைப்பார்த்து, “நாம் இந்த மலைரைப்போன்று நிறத்தில் இல்லையே, மிருதுவாக இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டா?'' இல்லையே. ரோஜாப் பூவின் அழகுஒரு விதமானது. நிலவின் அழகு வேறுவிதமானது!'' என்றார்.

துறவி சொன்னதைக் கேட்டவுடன் தளபதியின் கண்கள் கலங்கின.

தங்களைமரியாதைக் குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறேன்துறவியே! என்னை மன்னிக்க வேண்டும்!''என்று அவர் கால்களில் விழுந்துவணங்கினான் தளபதி.

ஒப்பிடாதே! - ஜென் கதைகள்.  Read What's The Difference - Zen Master Story in tamil with pictures for kids.
ஒப்பிடாதே! | What's The Difference - ஜென் கதைகள் (Zen Master Story) ஒப்பிடாதே! | What's The Difference - ஜென் கதைகள் (Zen Master Story) Reviewed by haru on August 17, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]