சிறுவர் கதைகள் – காக்கா ஏன் கறுப்பாச்சு?
காக்கா ஏன் கறுப்பாச்சு?
ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்பதூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்துபோகுமாம்.அப்படி இருந்த காக்காஎப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..
சூரியபூர்நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சுஅழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளைஅழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டேவெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாணவயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்கவிளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களைரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம்.
தினமும்விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்டதான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்டபேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களாமாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன்இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.
சூரியன்கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவகூப்பிட்டு பையில சந்தனம்,வாசனைதிரவியங்கள், முத்து மாலை எல்லாம்கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம்ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும்இல்லையா? காக்கா அந்த பையதூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனையநோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.

வழியிலதிருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டுபோனாங்க போல.காக்காவுக்கு கொஞ்சஉணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை.

வழியிலதிருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டுபோனாங்க போல.காக்காவுக்கு கொஞ்சஉணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை.
அரண்மனைக்குபோயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒருமரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன்இந்த காக்கா பைய வெச்சுட்டுபோனதை பாத்துகிட்டே இருந்தானாம்.
நல்ல வாசனை வந்தது. அதனாலமரத்தில ஏறி பைய திறந்துபாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன்கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்துசொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டுமரத்தில இருந்த குப்பை எல்லாம்பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.
காக்காநல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசிஅரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன்கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்துபார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன்ஏன் இப்படி பண்ணிடுச்சு. என்மேல அன்பே இல்ல. எல்லாம்நடிப்பு. அவன் பேச்சு இனிமேல்டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.
மறுநாள்காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்தசூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்ததபாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னுபுரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம்.
காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனேவெள்ளையா இருந்த காக்கா கறுப்பாமாறிடுச்சாம். அதனால தான் சூரியன்கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமிமேல கோபம் வந்து தூரமாபோயிடுச்சாம்.
இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்காகறுப்பாச்சுன்னு?
இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்காகறுப்பாச்சுன்னு?
சிறுவர் கதைகள் – காக்கா ஏன் கறுப்பாச்சு?
Reviewed by haru
on
August 18, 2012
Rating:
Reviewed by haru
on
August 18, 2012
Rating:


No comments