சிறுவர் நீதிக்கதைகள் – சோம்பேறி?
சோம்பேறி?
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தானம். எந்த வேலையும் செய்யாமல் உண்பதும், தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்குஏகப்பட்ட வியாதிகள்.
வைத்தியர்வீட்டுக்குப் போகக்கூட முடியாமல், ஒரு வைத்தியரை வீட்டுக்கு வரவழைத்தானாம்.
அவர் ஒரு பாட்டில் நிறையசூரணம் (சூரணம் என்பது நன்கு பொடி செய்யப்பட்ட மருந்து) கொடுத்து எப்போதெல்லாம் வியர்வை வருகிறதோ அப்போதெல்லாம்சாப்பிடு. சூரணம் தீர்ந்ததும் வியாதியும்பறந்துடும்னு சொன்னாராம்.
சோம்பேறிவீட்டுக்கு வந்து காத்திருந்தானாம்.
எதற்கு? எப்போது வேர்க்குமென்று.
அப்போதுஅவன் மனை சொன்னாளாம் 'நீங்கள்ஏதாச்சும் வேலை செஞ்சாதான் வேர்க்கும்' என்று.
அவனும்தன் துணிகளைத் துவைப்பது, தோட்ட வேலை செய்வது, கடைக்குப் போவது, நிலத்தில் வேலைசெய்வது என் உழைக்க ஆரம்பித்தானாம்.
ஒவ்வொருமுறை வியர்க்கும் போதும் சூரணம் சாப்பிடவும்மறக்கவில்லை.
கொஞ்சநாளிலேயேவியாதி குணமடைந்து ஆரோக்கியமாக இருந்தான்.
ஆனால் சூரணம் பாதிதான் தீர்ந்திருந்தது.
மீதியைவைத்தியரிடம் கொடுத்து விட்டு கேட்டானாம் "எப்படிபாதி மருந்திலேயே எனக்கு குணமானது?" என்று.
அதற்குஅவர் "உன் வியாதி மருந்தால்தீரவில்லை. சுறுசுறுப்பான உன் வேலைகளால் சோம்பேறித்தனம்போய் குண்மடைந்து விட்டாய். நான் கொடுத்தது மருந்தேயில்லை. வெறும் துளசி, வெல்லம்கலந்தது" என்றாராம்.
அவனும்நன்றி சொல்லி விட்டுச் சென்றானாம்.
நீதி : சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாகஇருந்தால் நோயின்றி வாழலாம்.
சிறுவர் நீதிக்கதைகள் – சோம்பேறி?
Reviewed by haru
on
August 18, 2012
Rating:
No comments