சிறுவர் கதைகள் - உண்மையான பக்தன்
உண்மையான பக்தன்:-
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்குசந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும்வந்து வேண்டிக்கொண்டனர். அப்படி வேண்டிக்கொள்ளும்போது, “இறைவா... நான் தினமும் உன்னைவணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார்என்பது தான் அது. நேராகஇறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைகேட்டன.
அப்போது இறைவன், “தேவதைகளே! இந்த ஊரில் பலரையும்போய் சந்தித்து யார் எனது உண்மையானபக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
ஒருவன், “நான் கோவிலுக்குப் போகாதநாளே இல்லை... தினமும் மூன்று வேளைகடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.
அடுத்தவன், “நான் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் கோவில் போவேன்,'' என்றான்.
மற்றவன், “நான் வாரத்தில் ஒருநாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,'' என்றான்.
இன்னொருவன், “எனக்கு கஷ்டம் வரும்சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,'' என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒருசமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக்கண்டு பிடிப்பது எப்படிஎன்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச்சென்று கொண்டிருந்த ஒருவனைநிறுத்தி, “அப்பனே! உனக்குக் கடவுள்பக்தி உண்டா? நீ எப்போதுகடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதைகேட்டது.
அதற்கு அவன், “எனக்குக் கடவுளைநினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவிசெய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்றுபதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியேவிவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம்சாதித்தார்.
“தேவனே... உண்மையான பக்தன் யார் என்றுகண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.
“கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.
“யார் பிரபு? தினமும் மூன்றுவேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள்.
கடவுள் புன்னகைத்தபடியே, “இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாதுஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனதுஉண்மைப் பக்தன்,'' என்றார்.
உண்மை புரிந்தது தேவதைகளுக்கு...

Reviewed by haru
on
August 15, 2012
Rating:
No comments