சிறுவர் கதைகள் – பிரம்மராட்சஷன்
பிரம்மராட்சஷன்:-
ஒரு ஊரில் ஆலமரம் ஒன்றுஇருந்தது. அது நல்ல சுவையுடையநீரைக் கொண்ட ஒரு குளக்கரையில்இருந்தது. அந்த ஆலமரம் முதிர்ந்தவயதை உடையது.
அதன் நிழல் எப்பொழுதும் "குளுகுளு" வென இருக்கும். ஆலமரத்தடியில்ஒரு பெரிய மேடை இருந்தது.
ஊருக்குச்செல்லும் பிரதான சாலை அந்தஆலமரத்தை ஒட்டியே சென்றது. நான்குபக்கமுள்ள சிற்றூர்களுக்கும், பேரூர்களுக்கும் அந்த சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்; திரும்பிவந்தாக வேண்டும். அதனால் அந்த சாலைமக்கள் பெருக்கம் நிறைந்து காணப்பட்டது.
வெயிலில்வருகிறவர்களுக்கு ஆலமரமும் அதன் "குளுகுளு" நிழலும் அருகில் குளத்தில்கிடைக்கும் கற்கண்டு போன்ற தன்மையிலான நீரும்பாலைவனத்து பசுஞ்சோலை போலிருந்தன.
வெயிலில்வந்து களைப்புத் தீர குளத்து நீரைபருகி, முகம் கழுவி, கல்மேடையில் ஆலமரத்து நிழலில் அமர்ந்து கொள்வர். நல்ல ஓய்வு கிடைக்கும் வரைஅப்படி உட்கார்ந்து கொள்வர். சிலர் துண்டை விரித்துபோட்டு படுப்பதும் உண்டு.
அங்கே மக்கள் கூட்டம் எப்போதும், "ஜேஜே" என்றிருக்கும். ஆனால், சிறிது நாட்களாகஆலமரத்தடியில் வந்து தங்கி இளைப்பாறும்மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது.
ஆலமர நிழலுக்கு ஓடோடி வரும் அவர்கள்இப்போது அதன் அருகில் வரவேஅஞ்சத் தொடங்கினர். தொலைவிலே நடந்து சென்றனர்.
ஆலமரத்தைஅருகில் கடந்து செல்ல வேண்டிவந்தால் ஓட்டமாக ஓடினர். ஆலமரத்தைதிரும்பிக் கூட பார்க்காது சென்றனர். அதற்கு காரணம் அந்த ஆலமரத்துக்குபுதிதாக வந்து சேர்ந்த ஒருபிரம்ம ராட்சஷன் தான்.
நீர் அருந்த இளைப்பாற அவர்கள்உட்காருவதற்கு முன் மரத்தின் நீண்டகிளைகளை ஆட்டி பயமுறுத்தும். அவர்களிடம்மூன்று கேள்விகள் கேட்கும். அதற்கு அவர்கள் என்னபதில் சொல்கின்றனர் என்று பார்க்கும். அவர்கள்சரியான பதிலை சொல்லாவிட்டால் அதற்குகடும் கோபம் வரும்.
அவர்கள்தலையை கிள்ளி எடுத்து விடும். கிள்ளி எடுத்த தலையை ஆலமரக்கிளைகளில் தொங்கவிடும். அப்படி அகப்பட்ட தலைகள்ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.
அதனாலேயேயாத்ரீகர்கள், வழிபோக்கர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள்எல்லாம் ஆலமர நிழலில் தங்கஅஞ்சி அதன் அருகிலேயேவரயோசித்தனர்.
ஒரு மாமன்னன் தன் படைகளுடன் வந்துஇறங்கத்தக்க அளவுக்கு ஆலமரம் பெரிதாகவும், அதைவிட அதன் நிழல் பெரிதாகஇருந்தும் எவருக்கும் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருந்தது.
குளத்துநீர் எவரும் பருகப்படாமல் பாசிப்படிந்துஅதில் அல்லி, தாமரைப்பூக்கள் பூக்கஆரம்பித்தன.
அந்த ஆலமரத்தின் அருகில் சற்று தள்ளிஒரு கிராமம் இருந்தது. அதன்பெயர் சிங்கப்பட்டி. அக்கிராமத்தில் ராமாயி என்ற பாட்டிஇருந்தாள். அறுபது வயது இருக்கும். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் வசந்தா. அவளுக்குதிருமணம் ஆகி ஒரு அழகியஆண் குழந்தை பிறந்தது. அவன்பெயர் சுடலை. அவனுக்கு ஆறுவயது நடந்து கொண்டிருக்கும் போதுஅவன் அம்மாவும், அப்பாவும் சென்ற படகு ஆற்றில்கவிழவே இருவரும் இறந்து போயினர். பேரனைவளர்க்கிற பொறுப்பு பாட்டியை சேர்ந்தது.
குழந்தைபிற்காலத்தில் பேரறிஞனாகவும், கவிஞனாகவும் வருவான் என்பது அவன்படிப்பில் காட்டிய ஆர்வமும் கேட்கத்தொடங்கிய கேள்விகளுமே தெள்ளத் தெளிவாகக் காட்டின.
எதையும்ஏன், எதற்கு என்று அவன்கேட்கத் தொடங்கி தன் அறிவைவளர்த்துக் கொள்வதில் அக்கரை காட்டினான். தன்பேரன் புத்திசாலியாக இருப்பதை அறிந்து பாட்டி மகிழ்ந்தாள்.
அப்படிஒரு முறை அருகில் உள்ளஊரில் நடந்த ஒரு திருவிழாவிற்குபேரனை அழைத்துச் சென்றாள் பாட்டி. அப்படி போகும்போது பிரம்மராட்சஷன் வாழும் ஆலமரத்தை ஒட்டியசாலை வழியாக அவர்கள் செல்லவேண்டி வந்தது.
அந்த ஆலமரத்தில் வாழும் பிரம்ம ராட்சஷனைப்பற்றி பாட்டி நன்கு அறிந்திருந்ததால்பேரனை ஆலமரத்தை விட்டு ஒதுக்கி அழைத்துச்சென்றாள்.
பெரியதும்நிழல் கொடுக்கக்கூடியதுமான ஆலமரத்தடியில் சிறிது நேரம் விளையாடிவிட்டு பிறகு குளத்தின் குளிர்ந்தநீரையும் பருகிவிட்டுச் செல்ல விரும்பினான் சிறுவன்.
“சுடலை! ஆலமரத்தில் வாழும் பிரம்மராட்சஷன் பொல்லாதது... அது ஆலமர நிழலில் தங்குகிறவர்களிடம்மூன்று கேள்விகள் கேட்கும். அந்த கேள்விகளுக்கு சரியானபதிலை கூறாவிட்டால் அவர்கள் தலையை கொய்துஆலமரத்தடியில் கட்டித் தொங்கவிட்டு விடும். அதனால் இப்போது ஆலமரத்து அருகேசெல்லவே அஞ்சுகின்றனர். வா நாம் போய்விடலாம்!'' என்றாள் பாட்டி.
“பாட்டி! அப்படி என்ன மூன்று கேள்விகளைகேட்கிறது அந்த பிரம்மராட்சஷன்? அதற்குஇவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?'' என்று கேட்டான்.
“முதல்கேள்வியாக உலகில் எது பெரியது?'' என்று கேட்கும்."
“சரி! அதற்கு அவர்கள் என்னபதில் சொல்வார்களாம் பாட்டி!''
“இமயமலைஎன்பார்களாம்!''
“அது சரியான பதில் இல்லையா?''
“ஆம்... பிரம்மராட்சஷன் அடுத்ததாக இரண்டாவது கேள்வியான நல்லதை விட தீமையேஅதிகம் செய்யும் சிறிய வஸ்து எது?'' என்று கேட்கும்.
“பாம்பின்விஷம் சிறிதாக மருந்துக்கு பயன்படுகிறது. ஆனால், மரணம் விளைவிக்கவே அதிகமாகபயன்படுகிறது!'' என்பர்.
“அந்த பதிலும் சரியில்லை என்றுசொல்லிவிடுமா?''
“ஆமாம்... மூன்றாவது கேள்வியாக உருண்டு வேகமாக ஓடுவதுஎது?'' என்று கேட்கும்.
“அதற்குஎன்ன பதில் சொல்வார்கள்?''
“வண்டிச்சக்கரம், பணம் என்று சொல்வர்". இந்தபதில்கள் பிரம்ம ராட்சஷனுக்கு திருப்தியைஅளிக்காது. உடனே அவர்கள் தலையைகிள்ளி எடுத்து மரத்தில் தொங்கவிட்டுவிடும். சுடலை... நாம் இங்கிருப்பது ஆபத்தைவிளைவிக்கும். வா... போய் விடலாம்,'' என்று அவனது கையை பிடித்தாள்பாட்டி ராமாயி.
ஆலமரம்அருகில் சென்றான் பேரன். கால்களை அகலவிரிந்து பலமாக ஊன்றி இடுப்பின்இருபுறமும் கைகளை பதித்து பெருங்குரலில், “ஏ... பிரம்மராட்சஷா... உன் கேள்விகளுக்கு பதில்சொல்ல வந்திருக்கிறேன். வா... வெளியே... கேள்உன் கேள்விகளை!'' என்று கூறினான்.
“யாரடாசிறுவன் என் கேள்விகளுக்கு பதில்சொல்ல தோள்தட்டி வந்திருப்பது?'' என்றபடி ஆலமரத்தில் இருந்துவெளி வந்த பிரம்மராட்சஷன், சிறுவன்பயப்படட்டும் என்று தலைகள் தொங்கும்ஆலமரக் கிளைகளை உக்கிரமாக ஆட்டிற்று. அது புயல் வீசுவது போலபயங்கரமாக இருந்தது.
அதை கண்டு அஞ்சவில்லை. “ஏ... பிரம்மராட்சஷா... உன் உருவம் கண்டுஎள்ளி நகையாடாதே... கேள் உன் கேள்விகளை?'' என்றான்.
“சாவதென்றுவந்து விட்டாய்... உன் விதியை யாரால்மாற்ற முடியும்? என் முதல் கேள்விஇதுதான். உலகிலேயே பெரியது எது?'' என்றுஆலமரத்து கிளைகளை பயங்கரமாக ஆட்டியபடிகேட்டது.
“உலகில்பெரியது அன்பு,'' என்றான்.
அதைக் கேட்டதும் பிரம்மராட்சஷனின் கண்கள் கலங்கின. "சரியானபதிலை சொல்லிவிட்டாயே?" என்பது போல சுடலையைபார்த்தது.
"அடுத்தகேள்வியைக் கேள்!'' என்றான் சுடலை."
“நன்மையைவிட தீமையே செய்கிற சிறியவஸ்து எது?''
“மனிதனின்நாவு!'' என்றான்.
தான் நினைத்திருந்த பதிலையே தங்கு தடையின்றிசொன்னதும் பிரம்மராட்சஷன் அசந்து போயிற்று. மூன்றாவதாகதான் கேட்கப் போகிற கேள்விக்குஅவன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்றெண்ணி, “உருண்டு வேகமாக ஓடுவதுஎது?'' என்று கேட்டது.
“காலம்!'' என்றான்.
அடுத்தகணம், “சிறுவனே! என் கேள்விகளுக்கு சரியானபதிலை சொல்லிவிட்ட நீ சிறந்த அறிவாளிதான். நான் தாயன்பை புரிந்துகொள்ளாமல் என் அன்னையை சிறியவஸ்துவான என் நாவால் திட்டிவதைத்தேன். அவளை கொடுமைப்படுத்தினேன்.
“என்னைபத்து மாதம் சுமந்து பெற்றஅவள் மணி வயிற்றை எட்டிஉதைத்தேன். பெற்ற மனம் துடித்தது. நான் என் தாய்க்கிழைத்த கொடுமைகளைபார்த்த ஒரு முனிவர் "நீபிரம்மராட்சனாகக் கடவாய்" என்று சபித்துவிட்டார். அது போலாகிவிட்டது.
“நான் தவறுகளை உணர்ந்து" எனக்குஎப்போது சாபவிமோசனம்?" என்று கேட்டேன். காலம்வரும் பொழுது என்று சொல்லிவிட்டு போய்விட்டார் அம்முனிவர். அதற்குத் தான் நான் இவ்வளவுநாட்களாக காத்திருந்தேன்.
“உருண்டுவேகமாக ஓடும் காலம் உன்வடிவில் வந்து என்னை சாபத்தில்இருந்து விமோசனமடைய செய்து விட்டது...'' என்றுசொல்லி சுடலையை வணங்கி எழுந்தபோது பிரம்மராட்சஷன் மறைந்து அழகான ஒருஇளைஞன் அங்கிருந்தான்.
அந்த இளைஞன் ஆலமரத்தில் தொங்கியதலைகளை எல்லாம் எடுத்து மண்தோண்டி புதைத்தான். ஆலமரத்தடியில் இருந்த மேடையையும் பிறபகுதிகளையும் சுத்தப்படுத்தினான். குளக்கரையை சுற்றி வளர்ந்து புதிராகமண்டிக் கிடந்த செடி, கொடிகளைநீக்கி குளக்கரையை அழகாக்கினான்.
பிரம்மராட்சஷனின்கொடிய மூச்சுப்பட்டு வாடியும் கருகியும் போய் இருந்த ஆலமரம்இப்போது பச்சை பசேலென்ற இலைகளோடுகாணப்பட்டது. மரத்தை விட்டுச் சென்றபறவைகள் எல்லாம் திரும்பி ஆலமரத்தில்தங்கின.
அவைகளில்விதவிதமான குரலொலிகள் இனிமையாக கேட்டன. வழிப் போக்கர்களும், யாத்ரீகர்களும் ஆலமரத்தடியில் உள்ள மேடையில் தங்கிஓய்வெடுத்து குளத்து நீரை பருகிமகிழ்ந்தனர். இவ்வளவுக்கும் காரணமான சுடலையை எல்லாரும்பாராட்டினர்.
சிறுவர் கதைகள் – பிரம்மராட்சஷன்
Reviewed by haru
on
August 15, 2012
Rating:
No comments