பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.

Ads Below The Title
அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி. எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா. புது கார்ல கோயிலுக்கு போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.

வாங்கலாம். நாளைக்கே வாங்கணும். மகனை இழுத்து அணைத்து சொன்னான் மாதவன். கார் வாங்க நிறைய பணம் வேணும். இன்னும் அஞ்சு வருஷத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னை காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்து புள்ளையா விளையாடிட்டு வாப்பா.
துள்ளிக்குதித்து ஓடினான் பரணி.

நம்ம ரெண்டு பேருமே அந்தக் கூலி. அஞ்சு வருஷத்தில் கார் வாங்கிடுவேன்னு குழந்தைகிட்டே எதுக்கு பொய் சொன்னீங்க? மாதவனின் மனைவி கேட்டாள்

இப்போ அவனக்கு அஞ்சு வயது அஞ்சு வருஷம் போனா நம்ம பொருளாதார நிலைமை புரிய ஆரம்பிச்சுடும். அந்த பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.

நன்றி: இ-விகடன்
பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம். பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம். Reviewed by haru on September 25, 2012 Rating: 5

No comments