முல்லாவும் முரட்டு தளபதியும்! - முல்லா கதைகள் | Mulla Stories in Tamil
முல்லாவும் முரட்டு தளபதியும்!
முல்லா நஸ்ருதீன் அவர்கள்ஒருமுறை அரச சபையில் பக்கத்துநாட்டைச் சேர்ந்த அறிவாளிகளுடன் போட்டிபோட்டு வென்று, தன் நாட்டின்மானத்தை காத்தார், அதனால் மகிழ்ந்த மன்னர்முல்லாவுக்கு இரண்டு மாடி வீட்டைஅன்பளிப்பாக கொடுக்க வந்தார்.
ஆனால் முல்லவோ “மன்னரே! இப்போ நானும் என் மனைவிமட்டுமே இருக்கிறோம், எங்களுக்கு ஏன் இரண்டு மாடிபங்களா, தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும்ஆபத்து, எனவே கீழ் பாகத்தைநான் எடுத்துக் கொள்கிறேன், மேல் பாகத்தை வேண்டும்என்றால் நமது படைத்தளபதி அவர்களுக்குகொடுக்கலாமே” என்றார்.
படைத்தளபதி, சில நாட்களுக்கு முன்பு தான் எதிரிநாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களை பிடித்துவந்தார். மன்னரும்அவருக்கு பரிசு கொடுப்பதாக சொன்னார், பின்னர் மறந்து விட்டார்.
தளபதிக்கும்கேட்கபயம். முல்லாசொல்லி மன்னர் சேனாதிபதி மன்னர்முல்லாவுக்கு பங்களாவின் கீழ் பாகத்தையும், தளபதிக்குமேல் பாகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.
தளபதிக்கும்கேட்கபயம். முல்லாசொல்லி மன்னர் சேனாதிபதி மன்னர்முல்லாவுக்கு பங்களாவின் கீழ் பாகத்தையும், தளபதிக்குமேல் பாகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.
படைத்தளபதிக்குஏற்கனவே முல்லா மீது கோபமுண்டு, பைத்தியக்காரத் தனமாக ஏதோ எதோபேசினால் மன்னர் மகிழ்ந்து பரிசுகொடுக்கிறார், நாமோ உடல் வருந்தகடுமையாக போராடி எதிரிகளையும், கொள்ளையர்களையும்விரட்டுகிறோம், ஆனால் மன்னர் பரிசுதரவில்லையே என்ற வருத்தம் கொண்டார்.
தளபதி முரட்டு ஆசாமி, யாரையும் மதிக்க மாட்டார். இப்போது இருவரும் ஒரு பங்களாவில். முல்லாவின்மனைவி அவரைப் போல் அமைதியானவர், தளபதியும் மனைவி சொல்லவே வேண்டாம்.
தளபதி முரட்டு ஆசாமி, யாரையும் மதிக்க மாட்டார். இப்போது இருவரும் ஒரு பங்களாவில். முல்லாவின்மனைவி அவரைப் போல் அமைதியானவர், தளபதியும் மனைவி சொல்லவே வேண்டாம்.
மாடியில்இருக்கும் படைத்தளபதியின் மனைவிஅடிக்கடி கல் உரலில் மாவுஇடிப்பார். அந்தச்சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும்முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லாவின் மனைவி மேலே சென்று“நீங்கள் கீழே வந்து எங்கவீட்டில் மாவு இடிக்கலாமே, ஏன்மேலேயே இடிக்கிறீங்க, நானும் உங்களுக்கு உதவுகிறேன்”என்றார். ஆனால் தளபதியின் மனைவிஅதை ஏற்கவில்லை.
முல்லாஇரண்டு மூன்று தடவை படைத்தளபதியை சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவுஇடிக்கு மாறு அவர் மனைவிக்குச்சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத்தளபதிக்கோ கோபம்வந்து விட்டது.
“இதுமன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்போவேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும், மாவுஇடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீயார்?” என்று முல்லாவை அதட்டிஅனுப்பி விட்டார்.
மறுநாள்தூங்கிக் கொண்டிருந்த தளபதி, தன் கட்டடம்அதிர்வதைக் கண்டு எழுந்து கீழேஎட்டிப் பார்த்தார், அங்கே முல்லா கீழேஉள்ள தன் வீட்டுப் பகுதியில்கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
“கீழேஎன்ன செய்கிறாய்?” என்று படைத்தளபதிமாடியில் இருந்து அதட்டினார்.
“கீழ்ப்பக்கம்இருக்கும் என் வீட்டை முற்றிலுமாகஇடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக சின்னதாக ஒருவீட்டைக் கட்டத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தபடைத்தளபதி “என்னைய்யா முட்டாளாகஇருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்னஆகும் என்று யோசித்தீரா?” என்றுகோபத்தோடு கேட்டார்.
“மேல்வீட்டைப் பற்றி நான் ஏன்கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமைஇல்லை, நீர் கீழ்வீட்டைப் பற்றிஎன்றைக்காவது கவலைப்பட்டீரா?” என்று கூறி விட்டுமுல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
அதைக் கேட்டதும் பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். “நீர் பெரிய அறிவாளி என்பதைநான் ஒப்புக்கொள்கிறேன், அதனால்தான் மன்னர் உம்மை ரொம்பவேநேசிக்கிறார், நான் உங்கள் மீதுபொறாமை கொண்டேன், என்னை மன்னிக்கவும், நாம்இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல்ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான்நல்லது. நாம் இருவரும் நண்பர்களாகஇருப்போம்”என்றார் தளபதி.
“நான்எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்” என்று கூறிவிட்டு முல்லாசிரித்தார்.
முல்லாவும் முரட்டு தளபதியும்! - முல்லா கதைகள் | Mulla Stories in Tamil
Reviewed by haru
on
September 27, 2012
Rating:
No comments