Ads Below The Title

சிறுவர் கதைகள் - நாலு பக்கமும்!

நாலு பக்கமும்!

ரவி மிகவும் ஏழை குடும்பத்தைச்சேர்ந்தவன். இவன் தந்தை மட்டும்கூலி வேலைக்குச் சென்று வந்தார். ரவியைச்சேர்த்து அவர்கள் வீட்டில் நான்குபேர். தந்தையின் தினக் கூலி அன்றாடம்அவர்கள் வயிற்றுப்பாட்டைக் கழுவவே சரியாக இருந்தது.

சமயங்களில்கூலி வேலை கிடைக்காவிட்டாலோ, அன்றையவேலைக்கு கூலி கிடைக்காவிட்டாலோ அன்றுபட்டினிதான் கிடக்க நேரும் அல்லதுஅக்கம் பக்கத்தினரிடம் அரிசியோ பணமோ கடன்வாங்கித் தான் அன்றைய பாட்டைஓட்ட வேண்டும்.

தங்களுக்குமட்டும் ஏன் இந்த வறுமை? இந்த வறுமையை நீக்க என்னவழி என்று ரவி யோசிக்காதநாளே இல்லை.

ஒரு நாள், அந்த ஊரில் காமாட்சி பாட்டிவடை சுட்டு விற்று வந்தாள். அந்த வழியாக சென்ற ரவிமிகவும் ஏக்கமாக வடைகளை பார்த்தபடியேசென்றான். அவனை பார்த்து இரக்கப்பட்டபாட்டி, "ரவி இங்க வா. இந்தா வடை சாப்பிடு'' என்றாள்.

"பாட்டிஎன்கிட்ட காசு இல்லை. வேணும்னாஉனக்கு நான் விறகு பொறுக்கிதரட்டுமா?" என்றான் ரவி.

"சரிடாப்பா! இந்தா இந்த வடையைச் சாப்பிடு'' என்றாள் பாட்டி.

"ஏண்டாகப்பல் கவுந்த மாதிரி முகத்தைவச்சிக்கிட்டு இருக்க.... என்னாச்சு உனக்கு?'' என்றாள் பாட்டி.

"பாட்டிஎல்லார் வீட்லயும் வசதியா இருக்காங்க. ஆனால், எங்க வீட்ல மட்டும்தான் வறுமைதாண்டவம் ஆடுது. என்ன செய்றதுபாட்டி!'' என்று சொல்லும்போதே கண்களில்கண்ணீர் முட்டியது ரவிக்கு.

"குடும்பத்தில்ஒருவர் வேலை பார்த்து குடும்பம்நடத்துவது இக்காலத்தில் மிகவும் கஷ்டம். நாலுபேர்இருந்தால் நாலு பேரும் வேலைசெய்ய வேண்டும் அல்லது நாலு விதத்திலாவதுவரும்படி வர வேண்டும். அப்பொழுதுதான்கஷ்டமில்லாமல் காலத்தை ஓட்ட முடியும்'' என்றாள் பாட்டி.
அது ரவியின் மனதில் பசக்கென்றுஒட்டியது.

உடனடியாகஅம்மா எங்காவது வேலைக்கு சென்றால் சிறிது கஷ்டம் குறையுமேஎன்று தோன்றியது. அம்மாவிடம் எப்படி எடுத்துச் சொல்வதுஎன்ற தயக்கம்.

ஒரு நாள், "அம்மாஎன் நண்பன் ஜானுக்கு பிறந்தநாள். வகுப்பில் உள்ள எல்லாருக்கும் கேக்கொடுத்தான். சமோசா, கூல்டிரிங் என்றுஒரே அமர்க்களம் அம்மா'' என்றான் ரவி.

"அவங்கஅப்பா அம்மா இரண்டு பேரும்ஆபிஸ்ல வேலை செய்றவங்களா இருப்பாங்க. அதுதான் இப்படி செலவு செய்யமுடியுது'' என்று கூறினாள்.

"அம்மாநீங்க ஏம்மா வேலைக்கு போகலை?''

"நான்படிக்காத முண்டமாச்சே? என்ன வேலைக்குப் போவது?''

"படிக்காதஎல்லாரும் ஏதேதோ வேலை செய்யிறாங்களே?''

"அப்பஎன்னையும் வேலைக்குப் போகச் சொல்றியாக்கும். உங்கப்பனேஎன்னை வேலைக்குப் போகச் சொன்னதில்லை. நீசொல்லுறே போய்த்தான் பார்க்கிறேன். ஒரு ரூபாய் இரண்டுரூபாய் கிடைத்தால் காய்கறிச் செலவுக்காச்சே'' என்று சொல்லிக் கொண்டேஅம்மாவும் பிற வீடுகளில் வீட்டுவேலைகள் செய்தாள்.

முதலில்துணி துவைப்பது, பத்துப் பாத்திரம் தேய்ப்பதுஎன்று எடுபிடி வேலைதான். சிறிதுதான்கூலி கிடைத்தது. சமையல் வேலைக்குச் சென்றால், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால்பின்னர் சமையல் வேலைக்குச் செல்லஆரம்பித்ததும் கஷ்டம் சிறிது குறைந்தது.

தந்தைக்குஒரு நாள் வேலை கிடைக்காவிட்டாலோஅல்லது வேலைக்குச் சென்று கூலி கிடைக்காவிட்டாலோசமாளித்துக் கொள்ள முடிந்தது. வேலைக்குசெல்லும் வீடுகளிலிருந்து ரவிக்கு பழைய சட்டைடிராயர், தங்கைக்கு கவுன், தனக்கு பழம்புடவைகள் என்று வாங்கி வந்தாள்.

பண்டிகைகாலங்களில் இனிப்பும், போனசும் கிடைத்தது. வறுமைஅவர்கள் வீட்டை விட்டு ஓடத்தொடங்கியது.

"என்மகன் பேச்சை கேட்டதால் தான்நம்ப வீடு உருப்புட்டது'' என்றாள்அம்மா.

"அப்பாநாலுவித வருமானம் வரும்படி நாம் செய்யணும். அப்பதான்நாமும் இந்த சமுதாயத்தில் தலைநிமிர்ந்துநிற்கலாம்'' என்றான் ரவி. யோசித்துஇரண்டு ஆட்டையும், நான்கு கோழியும் வாங்கினர். தந்தை ஓய்வு நேரங்களில் வீட்டின்பின்புறம் காய்கறித் தோட்டம் போட்டார்.  

ஆடுகள்குட்டிப் போட்டு எண்ணிக்கை வளர்ந்தன. வளர்ந்த ஆட்டை நல்ல விலைக்குவிற்றனர். கோழி முட்டைகளை விற்றனர். வீட்டு சமையலிலும் முட்டை இடம் பெற்றது. விருந்தினர் வந்தால் கோழியும் உணவாயிற்று. சிறிது பணம் சேரவும் மாடுவாங்க நினைத்து அதைச் செயல்படுத்தினர்.  

மாடுபால் கறந்தது. பாலை வீட்டிற்கும் தாராளமாகபயன்படுத்தினர். மீதியை வீடுகளில் வாடிக்கைஏற்படுத்திக் கொண்டனர்.

வீட்டுத்தோட்டம் நன்கு வளர்ந்து காய்கறிகள்காய்க்க ஆரம்பித்தன. வீட்டிற்கு தேவையான காய்கறி போகமற்றவற்றை அக்கம் பக்கத்தில் விற்றனர்.

தற்போது அவர்களுக்கு கோழிமுட்டை, காய்கறி, பால் விற்பனை மூலம்தயிர், மோர் வெண்ணை நெய்என்று பணம் சேர்ந்தது. ஆடு, வளரும் போது பெரிய தொகையாகக்கிடைத்தது.

அக்கம்பக்கத்தவர் பணக் கஷ்டம் என்றால்இவர்களிடம் கடன் கேட்டு வந்தனர். ரவியின் தாய் கண்டிப்பானவர். அவர்களிடம்கடன் கொடுத்துவிட்டு வசூலுக்கு யார் அலைவது? திருப்பித்தருவர் என்பது தான் என்னநிச்சயம்? அதனால் பணம் தேவையெனில்ஏதாவது பொருளை எடுத்து வந்தால்தருகிறேன்.  

பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பொருளை திரும்பிப் பெற்றுச்செல்லலாம்என கன்டிஷன் போட்டார். அதற்கும் சம்மதித்து பலர் கடன் வாங்கிச்சென்றனர். ஒரு அறை நிறையபண்டம் பாத்திரங்கள் சேர்ந்து விட்டது. ஒவ்வொரு பாத்திரத்தின் மீதும்யார் பாத்திரமோ அவர்கள் பெயர் எழுதிஒட்ட வேண்டியது ரவியின் வேலை.

பெண்கள்என்றால் நகை ஆசை இல்லாமல்இருக்குமா? சேர்ந்த காசில் ரவியின்தாயார், காதில், கையில், கழுத்தில்என்று நகைகளாக வாங்கி அணிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

நகைகள்ஒன்றிரண்டு போட்டுக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். நிறைய நகைகள் உயிருக்கேஆபத்து. மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படவும் செய்கிறது. அதனால் நகையில் போடும்பணத்தை பாங்கிலோ, போஸ்டாபிசிலோ சேமித்து வைத்தால், சேமிப்புக்கு சேமிப்பும் ஆயிற்று. வட்டியும் வரும் என்று ரவிசொன்ன யோசனைப்படியே தன் தாய் பெயரிலும்தந்தைப் பெயரிலும் ரவி பெயரிலும் வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டு பணம் செலுத்தி வந்தனர். சேமிப்பும் வளர்ந்தது, வட்டியும் சேர்ந்தது.

வசதிக்கூட குடிசை வீடு பிடிக்காமல்ஓட்டு வீடாகி அதுவே மாடிவீடானது. ரவி சொந்தமாக சைக்கிள்வாங்கிவிட்டான். பள்ளிக்கு கடைகளுக்குச் செல்வது சைக்கிளில்தான்.  

ரவியும், அவன் பெற்றோரும் நினைத்துப் பார்த்தாலே ஆச்சரியமாயிருந்தது. வறுமையில் உழன்று சோற்றிற்கே வழியின்றிசிரமப்பட்ட தாங்கள் இந்த நிலைக்குஎப்படி உயர்ந்தோம் என்று ஆச்சரியப்படுவர். ஐடியாசொன்ன காமாட்சி பாட்டிக்கு புடவை, பழம், சுவீட், பணம் எல்லாம் சேர்த்து எடுத்துச்சென்று மரியாதைச் செலுத்தி மகிழ்ந்தான் ரவி.
சிறுவர் கதைகள் - நாலு பக்கமும்! சிறுவர் கதைகள் - நாலு பக்கமும்! Reviewed by haru on September 29, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]