பஞ்சதந்திர கதைகள் - நன்றி ஓடுகளே!
நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக்குதித்து ஓடவோ முடியவில்லை என்றமனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிறமுயல் தாவிக் குதித்து, ஓடிவருதைக் கண்டன.
"முயலேநில்!'' என்றது ஆமை.
முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய்தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.
"இது என்ன கேள்வி! உங்களுக்குஇருப்பதுபோல், என் முதுகில் கனமானஓடு இல்லை. அந்தச் சுமைஇல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்றுசொல்லி விட்டு, முயல் அந்தஇரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள்ஓடுதான் காரணமா?''
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப்போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாகஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர்அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள்முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.அவற்றைக்கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில்ஏதோ அசையும் ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள்ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள்உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.
ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிதுநேரம் சென்ற பிறகு ஓடுகளைவிட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.
தாங்கள்வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதேமுக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள்எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவைநன்றி கூறின.
நன்றி தினமலர்!
பஞ்சதந்திர கதைகள் - நன்றி ஓடுகளே!
Reviewed by haru
on
October 05, 2012
Rating:
Reviewed by haru
on
October 05, 2012
Rating:


No comments