சிறுவர் நீதிக்கதைகள் – பட்டுப் புழு!
பட்டுப் புழு!
ஒரு சிறிய தோட்டத்தில் ஒருஎறும்புப் புற்று இருந்தது. அந்தஎறும்புப் புற்றிலிருந்த எறும்புகள் பக்கத்திலிருந்த ஒரு பெரிய மரத்தின்மீது ஏறிக் கொண்டு இருந்தன. அந்த மரத்திற்குப் பக்கத்தில் சிறிய முசுக்கொட்டை செடியொன்றுஇருந்தது.
அந்த செடியின் ஓரிடத்தில்ஒரு சிறிய கூடு இருந்தது. அந்த பஞ்சுக் கூட்டிற்குள் ஒருபுழுவொன்று மெல்ல வாலாட்டிக் கொண்டுஇருந்தது. அதைக் காணவே அசிங்கமாக கறுப்பாகஇருந்தது.
அது ஒரு பட்டுப்புழு. அதுதான் நன்கு வளர்ந்துகூட்டுப் புழு ஆகி பின்அழகிய பட்டுப் பூச்சி ஆகும். இப்போது எறும்புகள் அந்தப் புழு தனதுகூட்டில் இருந்த போதுதான் பார்த்தன.
அந்த எறும்புக் கூட்டத்தில் ஒரு பொல்லாத தீயகுணமும் குறும்பும் கொண்ட ஒரு எறும்புஇருந்தது. அந்த எறும்பு மரத்தடியில்இருந்து செடியில் வாழும் புழுவைக் கண்டன.

உடனே"ஓ! சிறிய புழுவே! உன்னைப்பார்த்தால் எனக்கு மிகவும் பாவமாகஉள்ளது. எங்களைப் பார். எத்தனை உயரமானமரத்தில் எத்தனை எளிதாக ஏறிச்செல்கிறோம். ஆனால், நீயோ ஒருபோதும் உயரமான மரத்தில் ஏறமுடியாது பாவம். உங்களது பிறவிஅப்படி! என்ன செய்வது,'' என்றுகேட்டான். அதனைக் கேட்ட மற்றஎறும்புகள் மிக கேலியாகச் சிரித்தன.
புழு அமைதியாக பதில் ஏதும் கூறாமல்இருந்தது. பின் எறும்புகள் அந்தப்புழுவை கேலியும், கிண்டலும் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டன. சிறிதுநாட்கள் ஆனது.
புழு அமைதியாக பதில் ஏதும் கூறாமல்இருந்தது. பின் எறும்புகள் அந்தப்புழுவை கேலியும், கிண்டலும் செய்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டன. சிறிதுநாட்கள் ஆனது.
ஒரு நாள் அதே எறும்புகள்மீண்டும் அந்த மரத்தில் மேலேஏறிச் சென்றன. அப்போது முசுக்கொட்டைசெடியின் அருகில் பட்டுப் புழுவின்கூடு மட்டும் இருந்தது. சுற்றிலும்அந்தப் பட்டுப் புழுவைக் காணவேஇல்ல. உடனே அந்த எறும்புகள், பாவம் அந்தப் புழு கூட்டிலேயேதனது வாழ்வை முடித்துக் கொண்டதுபோலும் என்று கூறிக் கேலியாகசிரித்தன. அப்போது எறும்புகளின் தலைக்குமேலிருந்து, "எறும்பு நண்பர்ளே!'' என்றுயாரோ கூப்பிடும் குரல் கேட்டது.
எறும்புகள்மேலே பார்த்தன. வானத்தில் மிக அழகிய பட்டுப்பூச்சி ஒன்று சிறகடித்தபடி நின்றது.
அந்த பட்டுப் பூச்சி எறும்புகளைபார்த்து, "நண்பர்களே! இப்போது நான் உங்களைவிட மிக உயரமான வானில்சிறகடித்துப் பறக்கிறேன். உங்களால் வெறும் மரத்திலும் உயரமானசுவர்களிலும் மட்டும்தான் ஏற முடியும். ஆனால், என்னால் அதை விட மிகஉயரமான மலைக்கு மேலும் வானம்வரையிலும் கூட பறக்க முடியும்" என்று கூறியது.
"மேலும்இதற்காக உங்கள் பிறவியை ஈனப்பிறவி என்று நான் கூறவில்லை. யார் யாருக்கு என்ன திறமை தேவையோஅந்த திறமைகளை அவரவர்க்கு இறைவன் தருகிறான். இதனால்நமது திறமைகளுக்காக நாம் கர்வப்பட்டு பிறரைஇகழக் கூடாது. அதை புரிந்துகொள்ளுங்கள்.'' என்று அறிவுரை கூறியது. பாவம் எறும்புகள் இப்போது தலைகுனிந்து சென்றன.
நீதி : எப்போதும்பிறரை குறைத்து மதிப்பிடகூடாது!
சிறுவர் நீதிக்கதைகள் – பட்டுப் புழு!
Reviewed by haru
on
October 05, 2012
Rating:
No comments