Ads Below The Title

தெனாலிராமன் கதைகள் – ஒற்றன்!

ஒற்றன்!

ஒரு முறை தெனாலி ராமன்வாழ்கின்ற நாட்டு மன்னருக்கு அண்டைநாட்டு அரசன் ஒருவர் ஓலைஅனுப்பியிருந்தார்.

மதிப்புக்குறியராஜாவுக்கு,
உங்கள்நாட்டின் மேல் நான் போர்தொடுக்க உத்தேசித்துள்ளேன். மூன்றாவது பெளர்ணமி அன்று உங்கள் நாட்டிற்குஎதிராக போர் முரசு கொட்டப்படும். எனது நாட்டுப்படையைப் பற்றி நீங்கள் அறியாததா? நீங்கள் போருக்கு சம்மதமா? கத்தியின்றி இரத்தமின்றி போர் முடிய வேண்டும்என்றால், நீங்களும், உங்கள் நாடும் என்னிடம்தோல்வியை ஏற்றுக் கொண்டு, நாட்டினைஎன்னிடம் கொடுக்க வேண்டும்.  

அப்படிநீங்கள் செய்தால் உங்களுக்கு உயிர் பிச்சை கொடுத்துநாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நீங்கள்வாழ்ந்து கொள்ளலாம்.

இப்படிக்கு,
ராஜ ராஜ சிம்மன்.

மன்னர்உடனே அரச சபையினை நோக்கிஅவர்களது கருத்துக்களை கூறச் சொன்னார்.

சேனாதிபதிமுதல் மந்திரிகள் வரை ராஜ ராஜசிம்மனின் படையை வெல்ல முடியாதுஎன்பதை ஆணித்தனமாக கூறினார்கள். மன்னனுக்கும் தெரியும் அந்தப் படையை வெல்லமுடியாது. மேலும் போர் ஏற்ப்பட்டால் எண்ணற்றமக்கள் உயிரை இழப்பார்கள், பெரும்சேதம் ஏற்ப்படும்.  

இதற்கு என்ன தான்வழி என்று கேட்டார் மன்னர்.

உடனே அனைவரும் ஆளுக்கு ஒன்றாக பேசினார்கள். அனைவரின் கருத்தும் போரிடாமல் எதிரிக்கு தலை வணங்கலாம் என்பதே.

இவ்வளவுநேரமும் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தெனாலிராமன் பேசத் தொடங்கினார். “மன்னா! எதிரி மன்னன் ராஜ ராஜசிம்மனிடம் நீங்கள் மண்டியிட்டு விட்டால், நாளைய வரலாறு நம் நாட்டையேகேலி செய்யும், இத்தனை நாள் நீங்கபெற்றிருந்த புகழ் எல்லாம் மங்கிபோயிடும், மக்களுக்கும் பெரிய அவமானமாகை விடும்.. அதற்கு பதில் போரிட்டு மடிந்தாலும், மாபெரும் படையுடன் போரிட்டு செத்து மடிந்தார்கள் என்றுவரலாறு இருக்கும்"

அரசரை தவிர அனைவரும் தெனாலிக்குபித்து பிடித்து விட்டது என்று கூறி, அவருடன் வாக்குவாதப் பட்டார்கள். முடிவில் மன்னர் சொன்னார்

தெனாலிராமன்சொல்வதில் உண்மை இருக்கின்றது. அடிமையாகவாழ்வதை விட போர் செய்துமடியவே விரும்புகின்றேன்: என்றார்.

அத்தோடுஅரச சபை கலைந்து விட்டது. அதன் பின்னர் மன்னரும் தெனாலியும்நீண்ட நேரம் தனிமையில் உரையாடினார்கள். இதற்கு மாற்று வழி உண்டாஎன்று ஆய்வு செய்தார்கள்.ஐந்துநாள்களுக்குப் பின் மீண்டும் அரசசபை கூடியது.

அரசரைப்பார்த்துமன்னா உங்களுக்கு என்னிடம்நம்பிக்கை இருந்தால், இந்த விசயத்தை என்னிடம்விடுங்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன். எனது உயிரை கொடுத்தாவது இந்தநாட்டினை காப்பாற்றுகின்றேன். என்றார் தெனாலி.

அதற்குமன்னர் சம்மதம் தெரிவித்தார். தெனாலிகூறுவதைப் போன்று ஒரு ஓலைஎழுதி மோதிர முத்திரை பதித்துகொடுத்தார் தெனாலியிடம்.

அந்த ஓலையை எடுத்துக் கொண்டுதெனாலி எதிரி நாட்டு மன்னர்ராஜ ராஜ சிம்மம் முன்னால்போய் நின்றார், அரசர் கொடுத்த ஓலையைஉரக்கப் படித்தார் .

மதிப்புக்குறியமன்னர் ராஜ ராஜ சிம்மனுக்கு.உங்கள் படைக்கு சற்றும்சளைத்தவர்கள் அல்ல எம் வீரர்கள். போருக்கான நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றார்கள். உங்களை படையின் மனபலம்உங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றுநினைக்கின்றேன். அவர்கள் எங்கள் படையோடுபோர் செய்வதற்கு பயந்து நடுங்குகின்றார்கள். எதற்குகோழைகளின் உயிரை கொல்லவேண்டும் என்றுஎண்ணுகிறேன். இந்த ஓலையை எடுத்துவந்த வீரர் எங்கள் படையில்மருத்துவ உதவி செய்பவர். இவரைஉங்கள் நாட்டு சேனாதிபதி சண்டையிட்டுவென்று விட்டால், எனது நாட்டை உங்களுக்குபரிசாக கொடுத்துவிடுகின்றேன்.


ஓலையில்எழுதியிருப்பதை கேட்ட ராஜ ராஜசிம்மன், தெனாலியை மாறி, மாறிப் பார்த்தார்.

மெலிந்தஒருவம் கொண்ட தெனாலியை கேலியாகப்பார்த்தார். “யார் அங்கே இவனைபிடித்து சிறையில் அடையுங்கள் என்றார் மன்னர்.

மன்னிக்கவும்மன்னா, ஒரு நாட்டின் தூதுவனாகவந்தவரை சிறையில் அடைப்பது போர் மரபுகளை மீறும்செயல் அல்லவா?” என்றார் தெனாலி.

உமதுமன்னர் உம்மை எமது சேனாதிபதியுடன்சண்டை செய்யும் படி அனுப்பியுள்ளதாக இந்தஓலையில் எழுதியிருக்கின்றார், இது தெரியுமா உனக்கு.

தெனாலிஅப்படியா மன்னா. எங்கள் மன்னர்இதைப் பற்றி எனக்கு எதும்கூறவில்லை. ஆனாலும் எங்கள் மன்னார்உத்தரவுக்கு கட்டுப்படுகின்றேன். ஆனால் ஒரு வேண்டுக்கோள்எங்கள் நாட்டு சட்டம், சண்டைசெய்யும் முன், சண்டை செய்யும்இருவரும் மூன்று நாட்களுக்கு சிறையில்இருக்க வேண்டும் என்பதே, அதன் படிஎன்னையும், உங்க சேனாதிபதியையும் சிறையில்அடையுங்க, நான்காம் நாள் நான் அவருடன்போட்டி போடுகிறேன்

அப்போதுதான் தெனாலி சேனாதிபதியைக் கண்டார். ஏழு அடி உயரத்தில் ஒருமாமிச மலை போன்று இருந்தான்அவன்.தெனாலியும், சேனாதிபதியும் சிறையில் அடைக்கப் பட்டார்கள். இருவரும் அடுத்தடுத்த சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

இருவருக்கும்இடையில் ஒரு சுவர் இருந்தது. இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது ஆனால்பேசிக் கொள்ளலாம்.

இருவருக்கும்நன்றாக சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பாடு முடிந்ததும், இப்போ சாப்பிட்டதைப் போல்தான் சண்டையில் உன்னை கொன்று, உன்னைசாப்பிடுவேன் என்று கத்தியபடி இருப்பான்சேனாதிபதி.

சரி சரி அப்போது பார்த்துக்கொள்வோம் என்று மாத்திரம் பதில்சொல்வார் தெனாலி.சேனாதிபதி நித்திரையானதுஇருவருக்கும் இடையில் இருந்த சுவரைதண்ணீர் ஊற்றி மெல்ல மெல்லகரண்டியால் சுரண்ட ஆரம்பித்தார் தெனாலி. விடியும் போது ஒரு அடிக்கும்அதிகமான அகலம் கொண்ட சுவரைசுரண்டி மெல்லியதாக ஆக்கிவிட்டார்.

இது ஏதும் சேனாதிபதிக்கு தெரியாது.மறுநாள் சாப்பாடு சாப்பிட்டுமுடிந்ததும், சேனாதிபதி கத்த ஆரம்பித்து விட்டான். உன்னை கொல்வேன், தின்னுவேன் என்று.சரி,சரிசேனாதிபதி. நாளை சண்டையின் போதுஅதைப் பார்ப்போம். இப்போ நான் வெற்றிலைசாப்பிடுகின்றேன் உன்னிடம் சுண்ணாம்பு இருந்தால் தா.

சுண்ணாம்புஇருக்கின்றது எப்படி தருவது என்றான்சேனாதிபதி.

இதோ விரலில் பூசி விடுஎன்று தான் சுரண்டிய சுவரில்கையால் குத்தினார். தெனாலியின் கை அடுத்த பக்கம்வந்து விட்டதை பார்த்து பயந்துவிட்டான் சேனாதிபதி.

சேனாதிபதிசுண்ணாம்பை பூசிவிடும் போது அவன் கைநடுங்குவது கவனித்த தெனாலி, “என்னசுவரை உடைத்ததற்கே இப்படி பயப்படுகின்றார்? எங்கள்நாட்டில் நான் ஒரே அடியில்ஒரு யானையைக் கொன்று இருக்கின்றேன் தெரியுமா? நான் எல்லாம் சும்மா தான். எங்கள் சேனாதிபதி யானையை தனது ஒருகையால் தூக்கி சுற்றுவதை நீபார்க்கவேண்டும். யாரிடமும் சொல்லிவிடாதே எங்கள் நாட்டிற்கு வந்தஒரு முனிவர், எங்கள் படையில் இருக்கும்வீரர்கள் அனைவருக்கும் அசுர பலம் கிடைக்கவரம் தந்தார். அதன் பின்னர் தான்எங்களுக்கு இப்படி அசுர கிடைத்ததுஎன்றார் தெனாலி.

எல்லாவற்றையும்கேட்ட சேனாதிபதி நன்றாக பயந்து விட்டான்.மறு நாள் நாட்டுமக்கள் அனைவரும் சண்டையைக் காண வந்திருந்தார்கள்.

மன்னர்தனது வாளை சேனாதிபதிக்கு கொடுத்துதலையை கொய்து விடு என்றார். தெனாலியைப் பார்த்து உமக்கு என்ன ஆயுதம்வேண்டுமோ கேட்டு வாங்கிக் கொள்ளும்என்றார். மன்னா எனக்கு ஆயுதம்வேண்டாம். வெற்றிலை மாத்திரம் கொடுங்கள் போதும் என்றார்.

மன்னர்சிரித்துக் கொண்டு ஆகட்டும் என்றார். இரண்டு வீரர்கள் ஓடிவந்து, ஒருவர் வெற்றிலை கொடுத்தார். மற்றவர் சுண்ணாம்பு கொடுக்க போனார்.

சுண்ணாம்பைசேனாதிபதியின் நெற்றியில் வையுங்கள் நான் எடுத்துக் கொள்கின்றேன்"சேனாதிபதியின் நெற்றில் சுண்ணாம்பு வைத்ததும் தனது கை முட்டியைமுறுக்கினார். அவ்வளவும் தான். ஐயோ என்னைஒன்றும் செய்து விடாதீர்கள் என்றுதெனாலியின் காலில் விழுந்து விட்டார்சேனாதிபதி.

மன்னா! இவர்கள் நாட்டின் மேல் ஆசைபடுவதை விட்டுவிடுங்கள். இவர் ஒருவரே நம் படையைஅழித்து விடுவார். என்று எல்லாவற்றையும் சொன்னான். சுவரை போய் பார்த்த மன்னனும்உண்மை என்றே நினைத்து விட்டார்.

ஒரு குதிரை வண்டியில் நிறையபொற்காசுகளை தெனாலியின் மன்னருக்கு பரிசாக கொடுப்பதாகவும், தன்னைமன்னித்து விடும் படியும் மன்னர்ஓலை எழுதி தெனாலியிடம் கொடுத்துவிட்டார். வெற்றியோடு நாடு திரும்பும் தெனாலியைவரவேற்க மன்னரும் மக்களும் எல்லையில் காத்திருந்தார்கள்.
தெனாலிராமன் கதைகள் – ஒற்றன்! தெனாலிராமன் கதைகள் – ஒற்றன்! Reviewed by haru on August 14, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]