Ads Below The Title

சிறுவர் நீதிக்கதைகள் - மனத்திருப்தி

மனத்திருப்தி:


ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன.


ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டுஇருந்தார். அவரின் அருகில் ஒரேமாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல்ஒரே மாதிரியாக இருந்தன.
 
அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர்,  ஒரேவிக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களாஅய்யா?என்றார்.

கல்தச்சர்சொன்னார், “எங்களுக்கு ஒரே ஒரு சிலையேபோதுமானது. ஆனால் முதலில் செய்யப்பட்டசிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால்இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன்.

வழிப்போக்கர்நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக்கவனித்துவிட்டுச் சொன்னார் எந்த சேதமும் எனதுகண்ணுக்குத் தெரியவில்லையே”.

தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறியசேதமுள்ளது.” என்றார்.

“இந்தச்சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.

50 அடிஉயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம் என்றார் கல்தச்சர்.

அதற்கு ஐம்பதடிஉயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிரிய சேதத்தையார் கவனிக்கப் போகிறார்கள்?என்றார் வழிப்போக்கர்.

தனது வேலையை சற்று நிறுத்திவிட்டுவழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார்யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள்வேறு யாருக்கும்அந்தச் சேதம் தெரிவதைப் பற்றிஎனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தைநான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிரியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல்வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்.

நீதி:உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின்பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காகவேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காகவேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.
சிறுவர் நீதிக்கதைகள் - மனத்திருப்தி சிறுவர் நீதிக்கதைகள் - மனத்திருப்தி Reviewed by haru on August 04, 2012 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]