பஞ்சதந்திர கதைகள் - வேஷம் போட்ட கழுதை
வேஷம் போட்ட கழுதை
ஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதைஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையானதீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறாரபுல் மேய்வதற்கு மேய்ச்சல் நிலமும் இல்லை.
இந்தக்காரணத்தால் கழுதை நாளுக்கு நாள்மெலிந்து கொண்டே வந்தது. சலவைத்தொழிலாளி கழுதையின் நிலை கண்டு மிகவும்கவலைப்பட்டான்.
ஒருநாள்சலவைத் தொழிலாளி காட்டு வழியாக நடந்துவந்துக் கொண்டிருந்தபோது ஒரு புலி செத்துக்கிடிப்பதைக் கண்டான்.
அதைக் கண்டதும் சலவைத் தொழிலாளிக்கு ஒருயோசனை தேன்றியது.
இந்தப்புலியின் தோலை உரித்து அதைக்கழுதை மீது போத்தி நெல்வயல்களில் விட்டு மேயச் செய்தால்உண்மையாகவே புலி மேய்வதாக எண்ணிப்பயந்து கொண்டு வயலுக்குச் சொந்தக்காரர்கள்பேசாமலிருந்து விடுவார்கள். கழுதை வயிறார மேயும்என்று சலவைத் தொழிலாளி நினைத்துகொண்டான்.
இறந்து கிடந்த சிங்கத்தை தூக்கிக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான். அன்று இரவு சிங்கத்தின் தோலை உரித்தான்.
மறுநாள்கழுதை மீது புலித் தோலைப்போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச்செய்தான்.
மறுநாள்கழுதை மீது புலித் தோலைப்போர்த்தி விளைந்திருந்த வயல்கள் பக்கமாக போகச்செய்தான்.
புலிதான்பயிரை மேய்கிறது என்று எண்ணிக் கொண்டுகுடியானவர்கள் அதை விரட்டப் பயந்துகொண்டு பேசாமலிருந்து விட்டார்கள்.
கழுதை விளை நிலத்தில் அன்றாடம்வயிறார மேய்ந்து நன்றாக கொழுத்துவிட்டது.
ஒரு நாள் கழுதை புலித்தோலைப் போர்த்திக் கொண்டு நெல் வயலில்மேய்ந்துக் கொண்டிருந்தது.
அப்போதுஅந்தப் பக்கமாக வந்த ஒருபெண் கழுதை உரத்த குரல்எடுத்து கத்தத் தொடங்கியது.
அதைக்கேட்டபுலித்தோல் போர்த்திய ஆண் கழுதை பெண்கழுதையின் குரலைக் கேட்டதும் உற்சாகமடைந்துதானும் உரத்த குரல் எடுத்துகத்தத் தொடங்கிவிட்டது.
குடியானவர்களுக்குஉண்மை விளங்கிவிட்டது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தடிகளைஎடுத்துக் கொண்டு வந்து கழுதையைநன்றாக அடித்துக் கொன்று விட்டார்கள்.
பஞ்சதந்திர கதைகள் - வேஷம் போட்ட கழுதை
Reviewed by haru
on
September 08, 2012
Rating:
No comments